“கார்த்திக்.. கார்த்.. திக் கண்ணா!!” என்று கண்ணீர் மல்க.. அவனருகே குனிந்து கிசுகிசுத்தவளின் கை.. தற்போது.. அவனது பரந்த நெற்றியில் பதிந்த காயத்தடத்தை மெல்ல வருடிக் கொடுக்கலானது.
அவனது ஓயாத அதிர்வுகள் இன்னும் இருந்தாலும் கூட.. முன்பைக் காட்டிலும்.. அந்த அதிர்வுகள் குறைந்திருந்தது என்னமோ உண்மை!!
ஆனால், அது பற்றி அறிந்திராத அபலையோ, உவர்நீருடன் தழுதழுத்த குரலில், “க.. கண்ணா.. என்ன பண்ணுது உங்களுக்கு.?? ப்ளீஸ் ப்ளீஸ்.. என்னால.. உ.. உங்களை இப்டிப் பார்க்க முடிய.. ல.. கார்த்தி..” என்றவளுக்கு.. என்ன தோன்றியதோ??
அப்படியே இவளது இதயமும் அச்சத்தில் துணுக்குற்று நடுங்க.. அவனது மாரில் முகம் புதைத்து.. அவனது தோள்புஜங்கள�... See more
“கார்த்திக்.. கார்த்.. திக் கண்ணா!!” என்று கண்ணீர் மல்க.. அவனருகே குனிந்து கிசுகிசுத்தவளின் கை.. தற்போது.. அவனது பரந்த நெற்றியில் பதிந்த காயத்தடத்தை மெல்ல வருடிக் கொடுக்கலானது.
அவனது ஓயாத அதிர்வுகள் இன்னும் இருந்தாலும் கூட.. முன்பைக் காட்டிலும்.. அந்த அதிர்வுகள் குறைந்திருந்தது என்னமோ உண்மை!!
ஆனால், அது பற்றி அறிந்திராத அபலையோ, உவர்நீருடன் தழுதழுத்த குரலில், “க.. கண்ணா.. என்ன பண்ணுது உங்களுக்கு.?? ப்ளீஸ் ப்ளீஸ்.. என்னால.. உ.. உங்களை இப்டிப் பார்க்க முடிய.. ல.. கார்த்தி..” என்றவளுக்கு.. என்ன தோன்றியதோ??
அப்படியே இவளது இதயமும் அச்சத்தில் துணுக்குற்று நடுங்க.. அவனது மாரில் முகம் புதைத்து.. அவனது தோள்புஜங்களை அணைத்தாற்போலப் பற்றிக் கொண்டாள் அவள்!!
“கா.. ர்ர்த்தீ… தயதயவு செய்து.. இப்டி ப.. பண்ணாதீங்க.. வே.. ணாம்.. வேணாம்.. ப.. பழைய.. நிலைக்கு வாங்.. க.. நான் என் பழைய கார்த்திய பார்க்கணும்.. ப்ளீ.. ஸ்.. ப்ளீ.. ஸ்!!” என்று இவள் குமுறுக் குமுறி அழத் தொடங்கினாள்.
“ஏ.. ஏன்.. ஏன் இப்டி ஒரு காரியம் பண்ணீ.. ங்க..” என்று அவன் நெஞ்சில் விழுந்து உளக்கவலைத் தாங்காது, அவள் கண்ணீர் விட்டு கதறியழுத காட்சி.. அது கல்நெஞ்சம் கொண்டாரையும் கரைத்து விடும் வகையிலேயே இருந்தது.
அவனது மார்பு நனைத்த கண்ணீர்.. சுயநினைவற்றுப் படுத்துக் கிடந்தவனின் பலவீனமான இதயத்தையும் உலுக்கியதோ?? அவனது வலுவிழந்து கிடந்த கைவிரல்கள்.. நுண்ணியமாக அசைந்தன!! தன் மாரில் முகம் புதைத்து அழுபவளை.. அள்ளி அணைத்திட.. உணர்வற்ற அந்நிலையிலும் கிடந்து தவித்தது அவனது கைகள்!!
அசைக்கப் பார்த்தும் முடியாமல் போக.. அவனுள்ளே ஒரு பெரும் மனப்போராட்டமே நடந்தேறிக் கொண்டிருந்தது. அந்த மனப்போராட்டம் தந்த உந்துதல்!! வெறி! அது அங்கே ஒரு பேரதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. ஆம், இதயத்துடிப்பு வீதத்தினை அளவிடும் மானிட்டர் திரையில்.. ஏறுவரிசையில்.. ஏறிக் கொண்டிருந்தன இலக்கங்கள்!!
இருபத்தைந்து.. இருபத்தாறு.. முப்பது.. தொடங்கி.. எழுபத்திரண்டு வரை.. கிடுகிடுவென ஏற.. அவனது அதிர்வும் அப்படியே அடங்கி.. உடல் பழைய சமரசநிலையை எட்டியது!! உண்மையில், தெய்வாதீனமாக.. மகிழினி மாத்திரம் அவனைக் காண நாடி ஓடி வந்திருக்காவிடில் தலைவனின் நிலை?? அது, இந்தக்கதைக்கு நிச்சயம் எதிர்மறையான முடிவினைத்தான் கொடுத்திருக்கும்!
ஆனால், மகிழினி மீது அவன் கொண்ட தீராத நேசம்.. அவளை இங்கு வரவழைத்திருக்க.. அந்தத் தூய நேசம்.. அவனது உயிரையும் மீட்டுவரும் அஸ்திரமும் ஆனது.