டீசர்
சற்று பதட்டமாக ஆபீஸ் டாய்லெட்டை கழுவி விட்டு வெளியே வந்தாள் மோகனா.
ஏ சி இருந்தாலும் வியர்த்து வழிந்து கொண்டு இருந்தது.
சுடிதார் ஷாலினை இழுத்து தன்னை மறைத்தவளது அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி... எடுத்து பார்த்தாள்.
" சொதப்பிடாதே...இது உன் வாழ்க்கை சம்பந்தப்பட்டது... பயந்த போல காட்டாதே... " என்று மெசேஜ்...
அவளோ , " கொடுக்கிற பணத்தை வாங்கிட்டு போயிடுவோமா?? " என்று பதில் அனுப்ப , " அப்போ உன் கற்பு உனக்கு சாதாரணமா போச்சா... " என்று கேட்டு நாலு செருப்பு எமோஜியும் வந்தது...
அவளோ அலைபேசியை வைத்து விட்டு , " ச்ச.. அவரை பார்த்தாலே பயம்... இதுல மிரட்டணுமாம்... " என்று யோசிக்க , " மோகனா எம் டி கூப்பிடுறார் " என்று ஒரு குரல்..... See more
டீசர்
சற்று பதட்டமாக ஆபீஸ் டாய்லெட்டை கழுவி விட்டு வெளியே வந்தாள் மோகனா.
ஏ சி இருந்தாலும் வியர்த்து வழிந்து கொண்டு இருந்தது.
சுடிதார் ஷாலினை இழுத்து தன்னை மறைத்தவளது அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி... எடுத்து பார்த்தாள்.
" சொதப்பிடாதே...இது உன் வாழ்க்கை சம்பந்தப்பட்டது... பயந்த போல காட்டாதே... " என்று மெசேஜ்...
அவளோ , " கொடுக்கிற பணத்தை வாங்கிட்டு போயிடுவோமா?? " என்று பதில் அனுப்ப , " அப்போ உன் கற்பு உனக்கு சாதாரணமா போச்சா... " என்று கேட்டு நாலு செருப்பு எமோஜியும் வந்தது...
அவளோ அலைபேசியை வைத்து விட்டு , " ச்ச.. அவரை பார்த்தாலே பயம்... இதுல மிரட்டணுமாம்... " என்று யோசிக்க , " மோகனா எம் டி கூப்பிடுறார் " என்று ஒரு குரல்...
" ஐயோ ஆரம்பிச்சுடுச்சே " என்று புலம்பிக் கொண்டே எம் டி அறைக்குள் அவள் நுழைய , அவளை இமைக்காமல் அழுத்தமாக பார்த்தபடி கம்பீரமாக அமர்ந்து இருந்தான் ஹர்ஷவர்தன்.
அவன் விழிகள் அவளில் மேலிருந்து கீழ் படிந்தன.
சுடிதார் அணிந்து இருந்தாள்.
டபிள் எக்ஸெல் சைஸாக இருக்குமோ என்று தோன்றியது...
இறுக்கிக் கொண்டே இருந்தது... அவள் பெரிய அங்க வனப்புகளும் தொந்தியும் தெரியாமல் ஷால் போட்டு இருந்தாள்.
தலை குருவி கூடு போல கலைந்து இருந்தது... பஸ்ஸில் வந்து இருப்பாள் போலும்...
முகமெல்லாம் வியர்வை துளிகள்... பினாயில் மணம் வேறு...
அவளை பார்த்து தலையை உலுக்கிக் கொண்ட ஹர்ஷவர்தனின் மனமோ , " கக்கூஸ் கழுவுறவ மேல பாயுற அளவுக்கு நான் இருக்கேனா?? ச்சை " என்று நினைக்க , ஒரு வார்த்தை பேசவில்லை... கண்களால் முன்னே இருந்த இருக்கையை காட்ட அவளும் அமர்ந்தாள்.
அவளுக்கும் அவனை பார்க்க பயம்....தலையை குனிந்து கொண்டான்.
ஹர்ஷவர்தனோ பக்கவாட்டாக திரும்பி அருகே நின்ற தனது செக்ரெர்ட்டரி விஷ்வாவை பார்க்க அவனோ , " ஓகே சார் நானே பேசுறேன் " என்று சொன்னபடி , அங்கே இருந்த செக்கை அவளை நோக்கி தள்ளியவன் , " அன்னைக்கு நடந்ததுக்கு நஷ்டஈடு... இந்த விஷயம் வெளிய வர கூடாது " என்றான்.
அவளோ எட்டி செக்கை பார்த்தாள்.
ஒரு கோடி நிரப்பட்டு இருந்தது...
" ஆத்தி ஒரு கோடி... இது போதுமே என் கடன் எல்லாம் போயிடும்... " என்று நினைக்க அவளுக்கோ மீண்டும் செருப்பு எமோஜி கண் முன்னே வந்து போனது..
செக்கை எடுக்க போன கையை கட்டுப்படுத்திக் கொண்டே ஆழ்ந்த மூச்செடுத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் , " நான் கன்னிப் பொண்ணு சார் " என்றாள்.
அவளை பார்த்து விட்டு விஷ்வாவை பார்த்தான் ஹர்ஷவர்தன்.
" அப்படியா சார் " என்று அவன் கேட்க அவனை முறைத்து பார்த்துக் கொண்டே , " ஃ பைவ் க்ரோஸ் ஃ பில் பண்ணிடு " என்றான்.
" விலை ஏத்துறீங்கன்னா உண்மை தான் போல " என்று முணுமுணுத்தவனோ , " சாரும் வெர்ஜின் தான் மா... கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணயே அவர் கிஸ் பண்ணுனது இல்லை.. அதுக்கும் இதுக்கும் சரியா போச்சுல " என்றான்.
" விஷ்வா " என்று சீரிய ஹர்ஷ்வர்தனோ , " டூ வாட் ஐ செட் " என்றான்.
அவனும் " ஓகே சார் " என்று சொல்லிக் கொண்டே செக்கை நிரப்ப ஆரம்பிக்க , ' கன்னி பொண்ணு என்கிறதுக்கு நாலு கோடி ஏத்தியாச்சு... இன்னும் காசு ஏத்தலாம் " என்று நினைத்தபடி , " கடிச்சு வச்சதுக்கு டாக்டர் கிட்ட போய் ஊசி எல்லாம் போட்டேன் " என்றாள்.
விஷவாவுக்கு சிரிப்பு வந்து விட்டது... அடக்கிக் கொண்டே செக்கை நிரப்ப , அவளை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே , ஆழ்ந்த மூச்சை விட்டான் ஹர்ஷவர்தன்.
" நம்பலையா காட்டட்டுமா?? " என்று கேட்டுக் கொண்டே ஷாலை விலக்கி கழுத்தை காட்ட , " எங்க பார்ப்போம் " என்றபடி விஷவா ஆர்வமாக பார்க்க முயல , " ஐயே " என்று சொல்லிக் கொண்டே ஷாலினால் தன்னை அவள் மூடிக் கொண்டாள்.
ஹர்ஷவர்தனுக்கு ஆத்திரம்... " ஓஹ் மை காட் " என்று சொன்னபடி நெற்றியை நீவியவன் , " விஷவா கெட் அவுட்... ஐ வில் ஹாண்டில் திஸ் " என்று சொல்ல , " ஆர்வமா பார்க்க போனது தப்பா ...அவர் மட்டும் தான் பார்ப்பார் போல " என்றபடி அவன் வெளியேற , அவன் செல்வதை பார்த்து விட்டு இப்பொது மோகனாவை அவன் ஆழ்ந்து பார்க்க அவளோ , தலையை குனிந்து கொண்டாள்...