“எய்யா பாண்டி, சொன்னா கேளு. எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். நீ பொண்ண கூட்டிட்டு வா!”
“முடியாது பெரியப்பா.”
“தம்பி, இது சரி இல்ல.. நியாயமும் இல்ல..”
“அப்ப. அவன் பண்ணது நியாயமா?”
“தப்புதான். நான் இல்லன்னு சொல்லல ஆனா நீ பண்றது அதவிட பெரிய தப்பு.”
“தப்பு, சரி, நியாயம், தர்மம்னு பாக்குற இடத்துல நான் இல்ல அவன் வேணும்னே எங்கள அசிங்கப்படுத்தனும்னே, என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கான். போயும் போயும், அந்த பைய எங்களுக்கு மாப்பிள்ளையா?”
“ஏன்? என்ன குறைச்சல் அவனுக்கு?”
“என்ன பேசுறீங்க பெரியப்பா? நாம யாரு, அவங்க யாரு?”
“ஏன், அவன் நமக்கு சொந்தம்தான?”
“சொந்தமா இருந்தா பொண்ணு குடுக்கணுமா?�... See more

“சொந்தமா இருந்தா பொண்ணு குடுக்கணுமா?”
“நீ வீம்புக்கு பேசுற…”
“இருக்கட்டும், பெரியப்பா. எங்க வீட்டுப் பொண்ணுக்கு என்ன பண்ணனும், அவளை யாருக்கு கட்டிக் கொடுக்கணும்னு எங்களுக்கு தெரியாதா?”
“உன் தங்கச்சிக்கு அந்தப் பையன் மேலதான் ஆசை.”
“அது சின்னப்புள்ள. அதுக்கு என்ன தெரியும்? இவன் என்ன சொல்லி மயக்கினானோ? அவகூடப் பிறந்த அண்ணன்கள் நாங்க ரெண்டு பேர் இருக்கும் போது, இவனுக்கு என்ன வந்துச்சு? எதுக்காக.. இவன் என் தங்கச்சிக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வச்சான்?”
“கல்யாணமா… இல்ல பாண்டி, கல்யாணம் இன்னும் நடக்கல.”
“சும்மா சொல்லாதீங்க பெரியப்பா. கல்யாணம் முடிஞ்சு, அவங்கள எங்கேயோ கண்காணாம.. தூரமா அனுப்பி விட்டுட்டான், அந்த முத்துபாண்டியன்.”
“முடிஞ்சு போச்சு, விடு. நீ அந்தப் புள்ளைய கூட்டிட்டு வா. அவனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு அது. உங்க சண்டையில.. அந்தபுள்ள என்ன பாவம் பண்ணுச்சு? அதோட எதிர்காலம் பத்தி நினைச்சு பார்த்தியா?”