பிரம்மாஸ்திரம் 2023 போட்டியில் இல் இரண்டாம் பரிசு பெற்ற கதை.
மாறுபட்ட காதல் கதை
அழுத்தமான, ஆளுமையான நாயகன்.
தைரியமான நாயகி.
கதையில் இருந்து சில துளிகள்:
இப்போது வந்த வான்மதி என்னும் பெண் ஆடைகள் விளம்பரத்தை இயக்கும் பெண்ணாக புதிதாக நியமிக்கப்பட்டு இரு வாரங்களே ஆகி இருந்தது.
"அருண் இல்லைனா என்னை வந்து பார்க்கணும்னு யாராவது சொன்னாங்களா?" என்று சற்று எரிச்சலாக கேட்க,
"அது வந்து... இல்லை சார்" என்று தயங்கிக் கொண்டே கூறினாள் அப்பெண் வான்மதி.
"தென் வை த ஹெல் யூ கேம் டூ மீ டைரக்டலி?" (அப்புறம் எப்படி நேரடியாக என்னை பார்க்க வந்த ) என்று கத்தினான் கௌதம்.
அதை கேட்டு அதிர்ந்த வான்மதியோ, "சா...ர், அது வந்து... நான�... See more
பிரம்மாஸ்திரம் 2023 போட்டியில் இல் இரண்டாம் பரிசு பெற்ற கதை.
மாறுபட்ட காதல் கதை
அழுத்தமான, ஆளுமையான நாயகன்.
தைரியமான நாயகி.
கதையில் இருந்து சில துளிகள்:
இப்போது வந்த வான்மதி என்னும் பெண் ஆடைகள் விளம்பரத்தை இயக்கும் பெண்ணாக புதிதாக நியமிக்கப்பட்டு இரு வாரங்களே ஆகி இருந்தது.
"அருண் இல்லைனா என்னை வந்து பார்க்கணும்னு யாராவது சொன்னாங்களா?" என்று சற்று எரிச்சலாக கேட்க,
"அது வந்து... இல்லை சார்" என்று தயங்கிக் கொண்டே கூறினாள் அப்பெண் வான்மதி.
"தென் வை த ஹெல் யூ கேம் டூ மீ டைரக்டலி?" (அப்புறம் எப்படி நேரடியாக என்னை பார்க்க வந்த ) என்று கத்தினான் கௌதம்.
அதை கேட்டு அதிர்ந்த வான்மதியோ, "சா...ர், அது வந்து... நான் முன்னாடி வேலை பார்த்த கம்பெனியில இந்த மாதிரி ஸ்டாப்ஸ் அவைலபிலிட்டி இல்லனா... முதலாளி கிட்ட சொல்லுவோம்" என்று வார்த்தையை மென்று முழுங்கினாள் வான்மதி.
"ஸ்டாப் யுவர் நான்சென்ஸ்... ஒவ்வொரு கம்பெனிக்கும் தனி ரூல்ஸ், வரையறை அண்ட் விதிகள் இருக்கு. நீ சின்ன கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டு அந்த பழக்கத்தை இங்க கொண்டு வராத, திஸ் இஸ் கார்ப்பரேட் கம்பெனி... அண்ட் நோ சார், ஒன்லி ஜி.கே... காட் இட்" என்று கத்தினான்.
"யா... காட் இட் ஜி.கே" என்று திணறினாள் வான்மதி.
"அருண் அவைலபிள் இல்லைனா... உன்னோட இமிடியேட் சுப்பீரியர் கிட்ட தான் நீ இதை ரிப்போர்ட் பண்ணனும்... நாட் யுவர் சி.ஐ.ஓ" என்று அழுத்தமாக கூறிய கௌதம்,
"இது உன்னுடைய பர்ஸ்ட் அசைன்ட்மெண்ட் ரைட்?" என்று கேள்வியாக கேட்டான்.
"எஸ் சா... ஜி. கே" என்று பயத்துடன் கூறினாள் வான்மதி.
"நீ என்ன பண்ணியிருக்கனு... லெட் மீ செக்" என்று எழுந்தவன், முன்னேச் செல்ல, வான்மதியும் பதற்றமாக கௌதமின் பின்னேச் சென்றாள்.
வேகமாக அட் ரூம்க்கு விரைந்துச் சென்றான் கௌதம். சில விளம்பரங்கள் இங்கு கம்பெனியிலேயே செட் போட்டு வடிவமைப்பர். சில விளம்பரம் அந்த அந்த கடைகளில் வடிமைக்கப்படும்.
இன்னும் சிலது அவுட்டோர் சூட்டிங் போட்டு வடிமைக்கப்படும். விளம்பரம் வடிவமைப்பிற்காக பிரத்யேகமாக ஒரு தளம் அமைத்திருந்தான் கௌதம்.
கௌதம் வேகமாக விளம்பரம் வடிவமைக்கும் அறைக்குள் நுழைய, அவனை கண்ட அனைவருமே திகைத்தனர்.விளம்பரத்தில் நடிக்கும் ஆர்ட்டிஸ்ட் உட்பட பெரிய அசைன்ட்மெண்ட்டில் மட்டும் தான் பொதுவாக கௌதமின் தலையீடு இருக்கும். இன்று இந்த சின்ன விளம்பரத்தை பார்க்க வருவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.