“அதுதானே பிரச்சனை. நீ ரொம்ப பேசாத பூவை அவங்ககிட்ட. அம்மாக்கு பி பி இருக்கு, அவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது”
“அவங்க பேசுறது பிடிக்கலையே ஒழிய எனக்கும் அவங்க ஹெல்த் மேல அக்கறை இருக்கு. உங்களுக்கு தெரியாதுங்க நான் அவங்ககிட்ட ரொம்ப பொறுமையாதான் போறேன். அதுக்காக அவங்க என்ன பேசினாலும் என்னால கேட்டுகிட்டே இருக்க முடியாது” என்றாள்.
“அப்படி கேட்டுகிட்டு இருக்க சொல்லலை பூவை, ஆனா அவங்க என் அம்மா, உடம்பு முடியாதவங்க வேற, அது எப்பவும் உனக்கு நினைவிருக்கட்டும்” என்றான்.
பூவை முறைத்து விட்டு அமைதியாக படுத்துக் கொண்டாள்.
“நீ பொறுமையான பொண்ணுன்னு நினைச்சேன் பூவை, ஏன் உனக்கு இவ்ளோ �... See more
“அதுதானே பிரச்சனை. நீ ரொம்ப பேசாத பூவை அவங்ககிட்ட. அம்மாக்கு பி பி இருக்கு, அவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது”
“அவங்க பேசுறது பிடிக்கலையே ஒழிய எனக்கும் அவங்க ஹெல்த் மேல அக்கறை இருக்கு. உங்களுக்கு தெரியாதுங்க நான் அவங்ககிட்ட ரொம்ப பொறுமையாதான் போறேன். அதுக்காக அவங்க என்ன பேசினாலும் என்னால கேட்டுகிட்டே இருக்க முடியாது” என்றாள்.
“அப்படி கேட்டுகிட்டு இருக்க சொல்லலை பூவை, ஆனா அவங்க என் அம்மா, உடம்பு முடியாதவங்க வேற, அது எப்பவும் உனக்கு நினைவிருக்கட்டும்” என்றான்.
பூவை முறைத்து விட்டு அமைதியாக படுத்துக் கொண்டாள்.
“நீ பொறுமையான பொண்ணுன்னு நினைச்சேன் பூவை, ஏன் உனக்கு இவ்ளோ கோவம் வருது?”
“பொறுமை, கோவம் பத்தியெல்லாம் நீங்க சொல்றீங்க பாருங்க…” ஏளனமாக சொன்னாள் பூவை.
“நான் பொறுமைன்னு என்னைக்குமே சொல்லிகிட்டதில்லை. உன்னை பத்தி நான் நினைச்சதை சொல்றேன்”
“பொறுமைக்கும் அடிமை மாதிரி இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குங்க. எது வேணா செய்ங்க எனக்கு ஒண்ணுமில்லைன்னு போகணும்னா சூடு சொரணை எல்லாம் மழுங்கி போகணும். இன்னும் எனக்கு அப்படி ஆகல, அப்படி ஆகவும் விட மாட்டேன்” என படுத்துக் கொண்டே சொன்னாள்.
“ஏதாவது சொன்னா சரின்னு சொல்ற பழக்கமே இல்லையா உனக்கு? உன்னை இங்க யாரும் அடிமையா நடத்தல. என்னை மீறி யாரும் அப்படி உன்னை நடத்தவும் முடியாது. ரெண்டு நாள்ல நான் கிளம்பறேன், தயவுசெஞ்சு நான் வர்ற வரைக்கும் கொஞ்சம் சமாளின்னுதான் சொல்றேன்” என்றான்.
“அப்போ நீங்க வந்த பிறகு பேசலாமா?” நக்கலாக கேட்டாள் பூவை.
“எப்பவும் நீ பேசலாம், ஆனா நான் வந்த பிறகு கூட எப்பவும் வரம்பு மீறி மட்டும் பேசக் கூடாது”
“நீங்க வந்தப்புறம் பொறுமையா போவேனா தெரியாது, ஆனா நீங்க வர்ற வரை எதுவும் பேசல போதுமா?” எனக் கேட்டாள்.
படுக்கையின் ஓரமாக படுத்திருந்தவளின் அருகில் அவளை நெருக்கியவாறு அமர்ந்தவன் “உங்கிட்ட எதுவுமே போதும்னு சொல்ல வர மாட்டேங்குது பூவை, வேணும் வேணும்னுதான் உள்ள கிடந்து துடிக்குது, என்ன செய்வேன்?” கிறக்கமாக சொல்லிக் கொண்டே அவள் மீதே கவிழ்ந்தான்.
“ம்ம்… நல்லா அம்மாக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்ப வழியாதீங்க. எனக்கு மூட் சரியில்லை, ஒழுங்கா தள்ளி படுங்க”
“மனசாட்சி இல்லாதவளே ரெண்டு நாள்ல கிளம்ப போறேன்டி”
“அதுக்கு… ப்ச்… மூச்சு விட முடியலைன்னு சொல்றேன்ல, தள்ளி படுங்கன்னு சொன்னா கேட்க மாட்டீங்க?” எரிச்சலாக கேட்டாள்.
உண்மையில் அவளுக்கு அப்படி எதுவும் சிரமமில்லை, அந்த நேரம் உதய் மீது கோவமிருக்க அவனை தவிர்க்க அப்படி சொன்னாள். அது அவனுக்குமே புரிந்திருக்க அவனும் விடுவதாக இல்லை.
“உனக்கும் சேர்த்து நானே மூச்சு விட்டுக்கிறேன், நீ இப்போ கப்சிப் ஆகுடி காரபனியாரம்!”
“யாரு நான் கார பனியாரமா? நீங்கதான் கார கொழுக்கட்டை, எரியுற அடுப்புல கிடக்குற நெருப்பு துண்டு, அம்மாகிட்ட மட்டும் அடங்கி போற அந்நியன், எப்ப வேணா வெடிக்க காத்திருக்கிற எரிமலை…” மூச்சு விடாமல் பேசியவளின் பேச்சை விழுங்கினான்.
மூச்சு வாங்க அவனை விலக்கி விட்டவள், “இப்படி பேசிட்டிருக்கும் போது முத்தம் கொடுத்து ஏமாத்த பார்க்கிற…” அவளை சொல்ல விடாமல் இந்த முறை பலமாக அவனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருந்தான்.
பூவையும் பலம் திரட்டி அவனை தள்ள படுக்கை ஓரம் என்பதால் கீழே விழுந்து விட்டான். இதை எதிர்பார்க்காத பூவை திகைத்துப் போனாள்.
விழுந்த ஆத்திரத்தில் கோவத்தோடு எழுந்தவன் அவள் தலை முடியை இறுகப் பற்றி, “அறிவில்லடி… இவ்ளோ திமிர் காட்டுற அளவுக்கு என்ன செஞ்சேன் இப்போ?” எனக் கத்தி கேட்க அதிர்ச்சியில் உறைந்தாள் பூவை.