"உயிரை வாங்குறடா" சலித்துக்கொண்டே திரும்பியவள் காமெராவை நேரே வைத்து கண்களை சுருக்கி வியூ பைண்டர் என்னும் காட்சிப்பேழை வழியாக பார்க்க, அங்கு சித்தார்த் பதிலாக கொள்ளைகொள்ளும் சிரித்த முகத்தோடு நின்றிருந்தான்.
உறைந்த அவள் உடல் கண்ணை கூட சுருக்கத்திலிருந்து விடுவிக்கவில்லை. அவனென்று வந்துவிட்டால் அவனை மனதில் சுமக்கும் அவள் கூட இரண்டாம் பட்சமாகிவிடுகிறாள் அவளுக்கு.
அவள் கனவில் பார்த்து அனுதினமும் பிரமித்த தோற்றம் இன்று கண் முன்னே.
அதே கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கண்களில் ஆயிரம் ஆசையை தாங்கி நிற்கிறது. அவனே தன்னை வந்து இறுக்கமாக அணைத்தது போல் உடலை சிறிதும் அசைக்க முடியவில்லை.
தெம்... See more

தெம்பை வரவழைத்து காமெராவை கீழிறக்கியவள் கைகளில் நெகிழ துவங்கிய காமெராவை வேகமாக சித்தார்த் பிடித்துக்கொண்டான்.
"ஏன்டா உங்க காதலுக்கு என்னோட காமெராவை ஏன்டா பலியாக்குறிங்க" அவன் புலம்பலை கேட்கும் நிலை இருவருக்கும் இல்லை.
இனங்கிய மனம் சாரலில் நனைந்து குளிரில் நடுங்கியது. வலுவிழந்து அவனை பார்த்தவளிடம் புருவம் உயர்த்தி என்ன என்றான்.
சொக்கு போடி போட்டு மயக்குவதெல்லாம் என்ன மாயை, ஒரே கண்ணசைவில் உடலின் செயல்பாட்டையே மாற்றுவதல்லவோ மாயை, காதல் மாயை. அவன் கேள்வியில் இத்தனை நேரம் இருந்தது போல் காட்டிக்கொண்ட தைரியமெல்லாம் இடிந்து விழுந்தது.
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான்.
ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்.
அஸ்வினுக்கோ புரியவில்லை அவளது செயல், கூச்சம் கொள்கிறாளோ என எண்ணி ஏன் என்றான் தலையை அசைத்தே சந்தேகமாக. இதழ் துடிக்க கைகளை அகலமாக விரித்து காட்டினாள்.
அவளது அன்பினில் உடல் சிலிர்த்தவன் தலை குனிந்து இதழ் கடித்து சிரித்து, அதே வெட்கத்தோடு சுற்றம் பார்த்தான்.
வீட்டினுள் இருந்த அதே கூட்டம் இல்லை என்றாலும் குறைந்தது பத்து பேர் இருந்தனர், அத்தனை பேர் பார்வையும் இவர்கள் மேல் தான், என்ன செய்கின்றனர் என்கிற ஒரு வினோத வேடிக்கை எண்ணம்.
இவர்களுக்காக அவனது பட்டாம்பூச்சியின் கட்டளையை செய்யாமல் செல்வது பிறவு பிழையாகிவிடுமே.
குறுகி விரித்த கையை அகலமாக விரித்து அவளை பார்த்து தன்னோடு அடைக்கலமாக்க தலை அசைத்து அழைத்தான்.
சிகரத்திலிருந்த நீரானது மேடு பள்ளம் பாராது சேர வேண்டிய மண்ணை சேர்வது போல் இறுகிய பாறையாகிய அவன் மார்பினில் சட்டென வந்து சேர்ந்தாள்.
பூவை எதிர்பார்த்தவனுக்கு பூ மழையே பெய்தது போல் அத்தனை பிரகாசம் முகத்தினில்.
Love between Aarohi and Aswin Narayan. A soft romantic love story.