சத்யரூபா பேயாட்டம் ஆடினாள். "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? திடீர்னு மாப்பிள்ளை ஓடிப் போயிட்டான்னு ஈஸியாச் சொல்றீங்க? என் அக்காவோட கல்யாணம் என்ன ஆகுறது..." என்று கத்தித் தீர்த்தாள்.
வைஷாலி தான், "சத்யா பொறுமையா இரு." என்று அவளை அமைதிப்படுத்த முயல, "நீ சும்மா இருக்கா. உனக்கு ஒண்ணும் தெரியாது" என்று தமக்கையை அதட்டியவள், "பதில் சொல்லுங்க அத்தை. இப்ப எல்லார் முன்னாடியும் நாங்க அசிங்கப்பட்டு நிக்கணுமா?" என்றாள் கோபத்துடன்.
இந்திரஜித் தான், "உன் சவுண்ட் சிஸ்டமை ஆன் பண்ணாத ரூப்ஸ். ஏதோ ஒரு லெட்டரை வச்சு, ஜீவி ஓடிப் போய்ட்டான்னு சொல்ல முடியாது. ஒருவேளை ஏதாவது பிரச்சனைல கூட மாட்டி இருக்கலாம்" எனத் தமையனுக�... See more
சத்யரூபா பேயாட்டம் ஆடினாள். "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? திடீர்னு மாப்பிள்ளை ஓடிப் போயிட்டான்னு ஈஸியாச் சொல்றீங்க? என் அக்காவோட கல்யாணம் என்ன ஆகுறது..." என்று கத்தித் தீர்த்தாள்.
வைஷாலி தான், "சத்யா பொறுமையா இரு." என்று அவளை அமைதிப்படுத்த முயல, "நீ சும்மா இருக்கா. உனக்கு ஒண்ணும் தெரியாது" என்று தமக்கையை அதட்டியவள், "பதில் சொல்லுங்க அத்தை. இப்ப எல்லார் முன்னாடியும் நாங்க அசிங்கப்பட்டு நிக்கணுமா?" என்றாள் கோபத்துடன்.
இந்திரஜித் தான், "உன் சவுண்ட் சிஸ்டமை ஆன் பண்ணாத ரூப்ஸ். ஏதோ ஒரு லெட்டரை வச்சு, ஜீவி ஓடிப் போய்ட்டான்னு சொல்ல முடியாது. ஒருவேளை ஏதாவது பிரச்சனைல கூட மாட்டி இருக்கலாம்" எனத் தமையனுக்கு ஆதரவாகப் பேச,
"ஓ... பிரச்சனைல மாட்டுறவரு. தெளிவாக் கடுதாசி எழுதி வச்சுட்டுப் போறாரா" அவள் நக்கலாகக் கேட்டாள்.
"யாராவது அவனைக் கடத்தி இருந்தா?" விழிகளை உருட்டி இந்திரஜித் கேட்டதில், "உங்க அண்ணன் என்ன, டாடா பிர்லாவோட பேரனா, இல்ல ஆணழகனா? ஏதோ சின்னப் பையனைக் கடத்தி வச்ச மாதிரி சொல்றீங்க." என்று எகிறினாள்.
"அமைதியாப் பேசு சத்யா. நம்ம பிரச்சனை நமக்கு மட்டும் தெரிஞ்சால் போதும் ஊருக்கே தெரிய வேண்டியது இல்ல." இம்முறை அவன் குரலில் ஒரு அழுத்தம் மிகுந்தது.
"நாளைக்கே எல்லாருக்கும் எங்க குடும்ப மானம் பேசு பொருளாகுமே, அப்ப என்ன செய்வீங்க? எல்லார் கிட்டயும் போய் பேசாதன்னு சொல்லுவீங்களா..."
"விடியறதுக்குள்ள அவனைக் கண்டு பிடிக்கலாம்..."
"என்ன பேசுறீங்க? வேற ஒரு பொண்ணோட போகப் போறேன்னு எழுதி வச்சுட்டுப் போன உங்க அண்ணன், விடிஞ்சதும் மனசு மாறிடுவாரா? எனக்கு இப்பவே ஒரு முடிவு தெரியணும். மணமேடை வரைக்கும் வந்துட்டுக் கல்யாணம் நின்னு போனா, எவ்ளோ கஷ்டம் தெரியுமா?"
"இன்னும் மணமேடைக்கு வரவே இல்லையே ரூப்ஸ். காலைல வரைக்கும் டைம் இருக்கே." எனக் கேலி புரிந்தவனை, தீயாகச் சுட்டவளை யாராலும் அடக்கத்தான் இயலவில்லை.
இறுதியில், "இப்ப என்ன தாண்டி பண்ணச் சொல்ற?" என்று கடுப்புடன் இந்திரஜித் கேட்டதில், "என் அக்காவை நீ கல்யாணம் பண்ணிக்கோ" என்றாள் அழுத்தமாக.
இந்தத் திருப்பத்தை எதிர்பாராமல் அவன் தான் ஒரு கணம் திகைத்தான்.
--
விஷயம் அறிந்து அப்போது தான் உறங்கச் சென்ற இந்திரஜித், முகம் கடுகடுக்க அங்கு வந்தான்.
அவனை ஏறிட இயலாமல் சத்யா தலையைத் தரையில் புதைக்க, அவனோ, "எங்க உன் அக்கா?" என்றான் கோபத்துடன்.
அவனிடமும் அதே பதிலைக் கமறலுடன் கூறியதில், "இந்த லெட்டர்ல இருக்குறது உன் அக்கா கையெழுத்து தான? இல்ல, உன் அக்கா கழுத்துல கத்தியை வச்சு யாரும் எழுதச் சொன்னாங்களா?" படு நக்கலாகக் கேட்டதில்,
"அவள் கையெழுத்து தான்" என்றாள் தவிப்புடன்.
"ஒருவேளை அவளை யாராவது கடத்தி இருந்தா?" பதற்றத்துடன் அவள் நிமிர,
"உன் அக்கா என்ன அம்பானியோட கசின் சிஸ்டரா? இல்ல, உலக அழகியா? கடத்திக் காசு கேட்டால் கூட, ஒரு பிரயோஜனமும் இல்ல" என்று தோளைக் குலுக்கியவனை முறைக்கக் கூட இயலவில்லை.
"கொஞ்சம் வெய்ட் பண்ணிப் பார்க்கலாம் இந்தர். கண்டிப்பா வந்துடுவா"
"வந்துடுவாளா? திரும்பி வர்றதுக்கு எதுக்கு லெட்டர் எழுதி வச்சுட்டுப் போகணும் சத்யா? அவள் ஓடிப் போயிட்டா அவ்ளோ தான். இப்போ என் கல்யாணம் நின்னதுக்கு பதில் சொல்லு."
"என்ன, உங்க கல்யாணம்? இதுவே திடீர்னு ஏற்பாடு பண்ணுனது தான?"
"அதுக்கு? எப்படினாலும் இன்னைக்கு மாப்பிள்ளை நான் தான... ஒரு பையனோட கல்யாணம் மணமேடை வரை வந்து நின்னா, எவ்ளோ அசிங்கம்னு தெரியுமா உனக்கு?" மூச்சு வாங்க அவள் கேட்ட கேள்வியையே அவன் கேட்க,
"அதான், இன்னும் மணமேடை வரை வரலையே..." அவளும் முணுமுணுத்தாள்.
"என் அண்ணனாவது டீசண்ட்டா, கல்யாணத்துக்கு முதல் நாள் தான் ஓடுனான். உன் அக்கா அமுக்குணி மாதிரி, நீ நேத்து என் அண்ணனை வாய்க்கு வந்தபடி பேசுனப்ப எல்லாம் சும்மா இருந்துட்டு, முகூர்த்த நேரத்துல பெரிய நாமமாப் போட்டுட்டு போய்ட்டா. இதுல பலியாடா என்னை ஆக்குனது தான் நீ பண்ணுன பெரிய தப்பு ரூப்ஸ். இப்ப எனக்கு என் கல்யாணம் நடந்தே ஆகணும். டாட்." என்று வீம்பாய் நின்றவனைப் பாவமாக ஏறிட்டவள்,
"இப்போ என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க இந்தர்?" என்றாள் சலிப்பாக.
"நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!" அலுங்காமல் குலுங்காமல் அசட்டையாக அவள் மீது இடியை இறக்கினான்.