உருக வைக்கும் காதல் கதை...
(discalimer- Romantic Alpha Male novel)
டீசர்
அவர்கள் அறையும் வந்து விட்டது.
அறையை திறந்து கொண்டே அவன் உள்ளே நுழைய, அவளும் கூடவே நுழைய, "நீ எதுக்கு உள்ளே வர்ற?" என்று கேட்டானே பார்க்கலாம், அவள் அதிர்ந்தே விட்டாள்.
"இது நம்மளோட ரூம் தானே" என்றாள்.
"என்னோட ரூம்" என்றான் அழுத்தமாக.
"ஆத்மன்" என்று நடுங்கலாக அவள் குரல் வர, "ஹியர் லுக் பூர்விகா, என்னோட ஆட்டிடியூட் பார்த்தே, நீ கண்டு பிடிச்சு இருப்பேன்னு நினச்சேன். ஓகே லீவ் தட். நானே சொல்றேன்... எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமே இல்லை... என் கம்பெனியை என் கிட்ட இருந்து பறிச்சிடுவேன்னு சொல்லி மிஸ்டர் சக்கரவர்த்தி மிரட்டி தான் என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னா�... See more
உருக வைக்கும் காதல் கதை...
(discalimer- Romantic Alpha Male novel)
டீசர்
அவர்கள் அறையும் வந்து விட்டது.
அறையை திறந்து கொண்டே அவன் உள்ளே நுழைய, அவளும் கூடவே நுழைய, "நீ எதுக்கு உள்ளே வர்ற?" என்று கேட்டானே பார்க்கலாம், அவள் அதிர்ந்தே விட்டாள்.
"இது நம்மளோட ரூம் தானே" என்றாள்.
"என்னோட ரூம்" என்றான் அழுத்தமாக.
"ஆத்மன்" என்று நடுங்கலாக அவள் குரல் வர, "ஹியர் லுக் பூர்விகா, என்னோட ஆட்டிடியூட் பார்த்தே, நீ கண்டு பிடிச்சு இருப்பேன்னு நினச்சேன். ஓகே லீவ் தட். நானே சொல்றேன்... எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமே இல்லை... என் கம்பெனியை என் கிட்ட இருந்து பறிச்சிடுவேன்னு சொல்லி மிஸ்டர் சக்கரவர்த்தி மிரட்டி தான் என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னார். ஐ டோன்ட் லைக் யூ... அப்புறம் இந்த ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் எல்லாம் வாய்ப்பே இல்லை... ஜஸ்ட் கெட் அவுட் ஒஃப் மை ரூம்" என்றான்.
அவளுக்கு கண்களை கலங்கி நீர் வழிய, "ஓஹ் மை காட், இந்த பொண்ணுங்களே இப்படி தான், எப்போ பார்த்தாலும் அழுதுட்டு இருக்க வேண்டியது. இரிடேடிங் க்ரீச்சர், வெளிய போடி" என்று சற்று அழுத்தமாகவே சொல்ல, "எங்க போறது?" என்று ஆதங்கமாக அவள் குரல் வெளி வந்தது.
அவளை ஆராய்ச்சியாக பார்த்தவன், "ஒரு பர்ஸ் எடுத்துட்டு வர கூட தோணலையா? கல்யாணம் பண்ணிட்டு அப்படியே புருஷன சுரண்டிக்கலாம்னு வந்திட வேண்டியது... மை காட்" என்று சொன்னபடி, தனது பர்சில் இருந்து கார்ட்டை எடுத்து நீட்டியவன், "வேற ரூம் புக் பண்ணிக்கோ... பணத்தை திரும்ப கொடுத்துடணும் புரியுதா?" என்றான்.
அவளோ சட்டென கண்களை துடைத்துக் கொண்டே, அவனிடம் இருந்து கார்டை வாங்கியவள், விறு விறுவென வெளியேற, அவனோ, "இரிடேடிங்" என்று சொல்லிக் கொண்டே, கதவை தாழிட்டு விட்டு ஆடைகளை களைந்து எறிந்தவன் குளியலறைக்குள் சென்று விட்டான்.
கார்டை எடுத்துக் கொண்டே வந்தவள், ரிசெப்ஷனுக்கு சென்று, "ஐ நீட் எ ரூம்" என்றாள்... அவளைக் கண்ட ரிசெப்ஷனிஸ்ட்டின் புருவம் சுருங்கியது.
கல்யாண புடவை அணிந்து அலங்காரங்களுடன் நின்று இருந்தவள், சற்று முன்னர் தான் அவள் கணவனுடன் முதலிரவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறைக்குள் நுழைந்திருந்தாள்.
உள்ளே நுழைந்து ஐந்து நிமிடங்கள் கூட கடந்து இருக்காது, மீண்டும் வேறு அறை கேட்கின்றாள்.
ஆச்சரியமாக இருந்தது... அவள் சிவந்த விழிகள் ஏதோ சரி இல்லை என்று எடுத்துரைத்து இருந்தது.
கேட்பது சரி இல்லை என்று தோன்ற, "ரூம் நம்பர் ஆறு மேம்" என்று சொல்லி அதன் கீயை பெண்ணவள் நீட்ட , அதனை வாங்கிய பூர்விகா வேகமாக அந்த அறையை நோக்கி நடந்தாள்.
அவள் நடையின் வேகம் கோபத்தையும் ஆத்திரத்தையும் வலியையும் சேர்த்து பிரதிபலித்துக் கொண்டு இருந்தது.
எப்படி எல்லாம் பேசி விட்டான் அவன்.
"ஜஸ்ட் கெட் அவுட் ஒஃப் மை ரூம்" என்று அவன் சொன்னது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது.
கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள் கதவில் சாய்ந்து நின்று கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் கண்ணில் அதுவரை அடக்கி வைத்து இருந்த கண்ணீர் வழிந்தது.
அவள் கண்ணீருக்கு உரிய ஆத்மனோ பாத்டப்பில் கண்களை மூடிக் கொண்டே அமர்ந்து இருந்தான்.
அவன் விழிகள் மூடி இருக்க இதழ்கள் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு இருந்தது...