டீஸர்.. “நீத்து. ப்ளீஸ் டா இனிமே இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் இங்கே வரும் பொழுது போடாத!!”.. என்று மனதுக்குள் கோபம் இருந்தாலும் அவளிடம் பணிவாகவே கேட்டான் நமது நாயகன் அன்புச் செல்வன். “அன்பு.. உங்க பெயரைப் போலவே நீங்க இன்னும் பட்டிக்காடாகத் தான் இருக்கீங்க. இந்த மாதிரி இடத்தில இப்படி ட்ரெஸ் பண்ணலைன்னா தான் வித்தியாசமாகப் பார்ப்பாங்க. ஐ ஆம் சாரி அன்பு. இன்னொரு தடவை என்னோட பெர்சனல் விசயத்துல நீங்க மூக்கை நுழைச்சா.. ஐ ஹேவ் டூ திங்க் அபவுட் அவர் ரிலேஷன்ஷிப்.” என்றவள் ஒரு கிளாஸ் மது பானத்தை எந்த தயக்கமும் இன்றி குடித்து முடித்து இருந்தாள்.“ம்.. ஆவுன்னா இதை ஒன்னு சொல்லி என்ன ஆஃப் பண்ணிடுவா!. அடுத்ததாக ட�... See more
டீஸர்.. “நீத்து. ப்ளீஸ் டா இனிமே இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் இங்கே வரும் பொழுது போடாத!!”.. என்று மனதுக்குள் கோபம் இருந்தாலும் அவளிடம் பணிவாகவே கேட்டான் நமது நாயகன் அன்புச் செல்வன். “அன்பு.. உங்க பெயரைப் போலவே நீங்க இன்னும் பட்டிக்காடாகத் தான் இருக்கீங்க. இந்த மாதிரி இடத்தில இப்படி ட்ரெஸ் பண்ணலைன்னா தான் வித்தியாசமாகப் பார்ப்பாங்க. ஐ ஆம் சாரி அன்பு. இன்னொரு தடவை என்னோட பெர்சனல் விசயத்துல நீங்க மூக்கை நுழைச்சா.. ஐ ஹேவ் டூ திங்க் அபவுட் அவர் ரிலேஷன்ஷிப்.” என்றவள் ஒரு கிளாஸ் மது பானத்தை எந்த தயக்கமும் இன்றி குடித்து முடித்து இருந்தாள்.“ம்.. ஆவுன்னா இதை ஒன்னு சொல்லி என்ன ஆஃப் பண்ணிடுவா!. அடுத்ததாக டிஜே ஆரம்பமாகி விட, போட்ட பாட்டுக்கு ஏற்ப நீத்து அவனையும் இழுத்துக் கொண்டு ஆடத் துவங்கி இருந்தாள். அவன் அவள் இடுப்பை பற்றாமல் ஆடிக் கொண்டு இருக்க.. “ஹோல்ட் மீ டைட் என்று அவள் அவனுடன் ஒட்டிக் கொள்ள, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று சற்று விலகி நின்றவன் மேல் இப்போது மின்சாரம் பாய்ந்த உணர்வு. அவன் காதலிக்கும் பெண் தான். இருந்தும் இப்படி பொது இடத்தில் அவ்வளவு நெருக்கம் கூடாது என்று கட்டுப்பாட்டுடன் விலகி நின்று இருந்தான். ஆனால் அவள் கொடுத்த உரிமையில் இப்போது அவன் கரம் அவளது இடையை இறுகப் பற்றிக் கொண்டது.அதே நேரம் மேடையில் ஒரு ஏ. ஆர். ரஹ்மானின் புதிய பாடல் ஆர்ப்பரிக்க, அந்த பரிட்சயமான குரல் கேட்டு அன்பும் மேடையைப் பார்த்தான். அங்கு புடவை உடுத்தி எழிலாக நின்றபடி பாடியது வேறு யாரும் அல்ல.. ஆதிரை தான்!! அவளைப் பார்த்ததும் நீத்துவின் இடை மீது இருந்த அவன் கரத்தை சட்டென உருவிக் கொண்டான். “ஐயோ இவா இங்க என்ன பண்ணிட்டு இருக்கா?. இவளுக்கு நீத்து பத்தி தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்ச மாதிரி ஆகிடும்மே!!”. என்று பதட்டத்துடன் அவள் பார்வையில் இருந்து அவன் தப்ப நினைக்க..
அதே நேரம் போதையின் உச்சத்தில் இருந்த நீத்துவோ அவன் விலகல் பிடிக்காமல், அதற்கு தண்டனையாக சட்டென அவன் இதழ்களை கவ்விக் கொண்டாள். அவள் கொடுக்கும் முதல் இதழ் முத்தம். ஆனால் அவனால் அதை ரசிக்க முடியவில்லை. அவள் பார்க்கப் போகிறாள் என்ற பதட்டம் ஒரு பக்கம். அவன் நண்பர்கள் வரும் நேரம் என்ற கலவரம் ஒரு பக்கம் அவனை திக்கு முக்காடச் செய்தது. அவள் விலகியதும் அப்பாடா.. என்று அவன் பார்வை ஆதிரையை நாடிச் சென்றது.“ஐயோ அவள் பார்த்து இருக்க கூடாது என்று வேண்டியபடி அவன் அவளைப் பார்க்க, அவள் என்னவோ அவர்களையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் பார்வையில் கூசிப் போனான் டீஸர் 2 “டேய் நாம அவளை முதன் முதலா பார்த்த போது நீ என்ன சொன்ன. “ச்ச என்ன பொண்ணு!! எவ்வளவு அழகான கண்கள்!.. என்ன நிறம்.. என்ன ஃபிகர்!!.. கட்டுனா இந்த மாதிரி ஒரு பொண்ணை தான் கட்டணும் அப்படின்னு நீ சொல்லலை!!”.என்று விமல் அன்று அவன் சொல்லிய வசனத்தை நினைவு படுத்தினான். “நான் மட்டுமாடா சொன்னேன்.. நீங்க என்ன எல்லாம் சொன்னீங்க.செம கட்டை. அப்படியே சுண்டி இழுக்கும் செக்ஸி ஃபிகர்.”“டேய்.. போதும் போதும் அது எதுக்கு இப்போ.. அண்ணி வந்து விடப் போறாங்க!!”.என்று விமல் நிறுத்த.“அண்ணியா? இது உங்களுக்கே ஓவரா இல்லையாடா?”. என்று அன்பு பரிதாபமாக கேட்க. teaser 3அதே நேரம் அன்போ மாப்பிள்ளையைத் தன் கண்களால் எடை போட..“அளவான உயரம், வெள்ளைத் தோல், சின்ன தொப்பை, ஜிப்பா என அனைத்தும் பொருந்தி இருக்க, அப்படியே அம்பி மாதிரி தான் இருக்கான். குடுமி மட்டும் தான் மீஸ்ஸிங். குணமும் அதே தான் போல.!!.. என்று எண்ணியவன் எதிரில் ஆதிரை தேவதையாக அலங்கரிக்கபட்டு வந்து நின்றாள்.அவன் வேலை வேலை என்று அலைந்ததில் அவன் ஆதிரையைப் பார்த்தே கிட்டத் தட்ட வருடங்கள் இருக்கும். நீத்து, மாடல் பெண்கள் என்று மேற்கத்திய உடை அணிந்த பெண்களையே பார்த்துப் பழகிய அவன் கண்களுக்கு ஆதிரையின் ஒப்பனை இல்லாத இயல்பான தோற்றமும், ஆர்பாட்டம் இல்லாத எளிய புடவையும் அவன் கண்களுக்கு ஏனோ ஒரு புது வித ஈர்ப்பை கொடுத்து இருந்தது.அவன் கண்கள் முதன் முதலாக தன்னை மறந்து அவளை ரசிக்க தொடங்கி இருக்க.. சட்டென சுதாரித்துக் கொண்டவன். தன் பார்வையை அவள் புறம் இருந்து வேறு புறம் திருப்பி இருந்தான்.எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சு இருக்கு என்று மாப்பிள்ளை வீட்டார் உற்சாகமாக சொல்ல.. அனைவர் முகமும் மலர்ந்து கொண்டது.அப்போது ஒரு குரல் “எனக்கு பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று அந்த அறையை மொத்தமாக அமைதியாக்கியது. எல்லோரும் சற்று அதிர்ந்தே அப்படி கேட்டவனை பார்த்து இருந்தனர். ஏன் என்றால் அப்படி கேட்டது என்னவோ மாப்பிள்ளை அல்ல.. அன்புச்செல்வன் தான்!!” பார்வதியோ அவன் அருகில் குனிந்து.. “நீ எதுக்கடா அவா கிட்ட பேசணும்”.. என்று அதட்ட.. “வேற எதுக்கு.. கல்யாணத்தை நிறுத்த தான்”.. என்று அவன் சொன்ன பதிலில் பார்வதியோ வாய் அடைத்து நின்று விட்டார்.