நாவலில் இருந்து ஒரு டீசர்
இதே சமயம் சமையல் கட்டுக்கு வந்த நிவேதாவோ, "அண்ணி, நைட் என்ன சாப்பாடு?" என்று கேட்க, "சப்பாத்தி தான் நிவேதா" என்று சொல்லிக் கொண்டே, அவள் வேலை செய்ய, நிவேதாவும் அவளுக்கு உதவியாக வேலை செய்தாள்...
சற்று நேரத்தில் மோகனின் கார் அவர்கள் வீட்டின் வாசலுக்கு வந்து நின்றது...
வாசலுக்கு சென்ற நித்திலனோ, "வாங்க சார்" என்று அழைக்க, உள்ளே வந்த மோகனோ, "வீடு அழகா இருக்கு" என்றார்...
அவனும் புன்னகைத்துக் கொண்டே, "உட்காருங்க" என்று சொல்ல, அங்கே இருந்த நாராயணனோ, "சார் நீங்களா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து நிற்க, அவரும், "உட்காருங்க, சேர்ந்தே பேசலாம்... நீங்களும் உட்காருங்க" என்று சொல்லி மகாலக்ஷ்மி�... See more
நாவலில் இருந்து ஒரு டீசர்
இதே சமயம் சமையல் கட்டுக்கு வந்த நிவேதாவோ, "அண்ணி, நைட் என்ன சாப்பாடு?" என்று கேட்க, "சப்பாத்தி தான் நிவேதா" என்று சொல்லிக் கொண்டே, அவள் வேலை செய்ய, நிவேதாவும் அவளுக்கு உதவியாக வேலை செய்தாள்...
சற்று நேரத்தில் மோகனின் கார் அவர்கள் வீட்டின் வாசலுக்கு வந்து நின்றது...
வாசலுக்கு சென்ற நித்திலனோ, "வாங்க சார்" என்று அழைக்க, உள்ளே வந்த மோகனோ, "வீடு அழகா இருக்கு" என்றார்...
அவனும் புன்னகைத்துக் கொண்டே, "உட்காருங்க" என்று சொல்ல, அங்கே இருந்த நாராயணனோ, "சார் நீங்களா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து நிற்க, அவரும், "உட்காருங்க, சேர்ந்தே பேசலாம்... நீங்களும் உட்காருங்க" என்று சொல்லி மகாலக்ஷ்மியையும் அமர வைக்க, நித்திலனோ, "நிவேதா காஃபி" என்றான் சத்தமாக...
"நிவேதா?" என்று மோகன் கேள்வியாக கேட்க, "தங்கச்சி சார்" என்றான் நித்திலன்...
"ஓஹோ" என்று சொல்லிக் கொண்டே இருக்க, நிவேதாவோ, "அண்ணி, நீங்க தான் காஃபி போட்டு கொடுங்க... எனக்கு சரியா போட வராது" என்று சொல்ல, நீலவேணியும் பெருமூச்சுடன் காஃபி போட்டவள், அதனை எடுத்துக் கொண்டே, ஹாலுக்குள் வந்தாள்...
அப்போது மோகனோ, "நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல" என்று ஆரம்பிக்க, அவரிடம் காஃபியை நீட்டினாள் நீலவேணி...
அவரும் காஃபியை எடுத்துக் கொண்டே, "இது தான் தங்கச்சியாப்பா?" என்று கேட்க, நீலவேணிக்கு அதிர்ச்சி...
அதே அதிர்ச்சியுடன் காஃபி கொண்டு வந்த ட்ரேயை அங்கிருந்த டீப்பாயில் வைக்க, "ஐயோ இல்ல சார்" என்று நித்திலன் ஆரம்பிக்க, "அப்போ அக்காவா?" என்றாரே பார்க்கலாம்...
நீலவேணிக்கு அந்த ட்ரெயினால் அவர் தலையில் டங்கு டங்கு என்று அடித்தால் என்ன என்று தான் தோன்றியது...
நாராயணனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "இல்ல சார்" என்று சொல்லி மேலே பேச முதல், "சரி நான் வந்த விஷயத்தை நேரே சொல்லிடுறேன்... என் பொண்ணு நேத்ராவுக்கு உங்க பையன் நித்திலனை பிடிச்சு இருக்கு... ரெண்டு பேரும் இன்னைக்கு நிறையவே பேசிக்கிட்டாங்க... கல்யாணம் பேசலாம்னு தான் வந்தேன்..." என்று சொல்ல, நீலவேணியோ அதிர்ந்து நித்திலனைப் பார்த்தாள்...
அவனுக்கோ புரையேறி விட்டது...
வெறுமையாக கல்யாணம் என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை... நிறையவே பேசிக் கொண்டார்கள் என்று சொல்கின்றாரே...
சட்டென நீலவேணியை பார்த்தவன் இல்லை என்கின்ற ரீதியில் தலையாட்ட, அவள் கண்கள் சட்டென கலங்கி விட்டன...
பதில் சொல்லாமல், விறு விறுவென சமையலறைக்குள் செல்ல முதல், "சார், சார்" என்று அவர் பேசுவதை தடுத்த நித்திலனுக்கு, "எனக்கு கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைங்க கூட இருக்கு" என்று சொல்லிக் கொண்டே இருக்க, அறைக்குள் விளையாடிக் கொண்டு இருந்த கீர்த்தனாவும் ஆகாஷும், "அப்பா" என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்து அவன் மடியில் அமர, இப்போது அதிர்ந்து எழுந்தது என்னவோ மோகன் தான்...
அவன் சங்கடமாக மோகனைப் பார்க்க, அவரோ, "ஐயோ பரவாயில்லை நித்திலன்... நான் தான் ஒழுங்கா விசாரிக்காம வந்து உங்க எல்லோருக்கும் சங்கடம் கொடுத்துட்டேன்... சாரி... இப்போ காஃபி கொடுத்தது உங்க வைஃப் ஆஹ்?" என்று கேட்டார்...
"ம்ம்" என்றான்...
"கூப்பிடுங்க" என்று சொல்ல, நித்திலனோ கீர்த்தனாவிடம், "அம்மாவை அழைச்சிட்டு வா" என்று சொல்ல, அவளும் சமையலறைக்குள் சென்று நீலவேணியை இழுத்துக் கொண்டே வர, மோகனோ, "சாரிம்மா, சரியா விசாரிக்காம வந்துட்டேன்... நித்திலனை கல்யாணம் பண்ணிக்க நீ ரொம்ப கொடுத்து வச்சு இருக்கணும்... ரொம்ப நல்ல பையன்" என்று சொல்லி விட்டு அவர் அவர்களிடம் விடை பெற்று செல்ல, நீலவேணியின் மனமோ, 'ஒரு நாள் அவர் பொண்டாட்டியா வாழ்ந்து பாருங்க தெரியும், கொடுத்து வச்சு இருக்கணுமாம்ல' என்று தான் திட்டிக் கொண்டது...