உத்திரபிரேதேசத்தில் வாழும் இரண்டு தாதாக்களின் மோதல்களும் அதற்கிடையில் மலரும் அவர்களின் காதலும் நிறைந்ததே இந்த கதை...
கதையிலிருந்து ஒரு குட்டி டீஸர்
லால்பகதூர் சர்வதேச விமான நிலையம்
என்னதான் மொத்த உத்திரபிரேதசமும் ராத்தோர் குடும்பத்தின் கைவசம் இருந்தாலும், சில சட்டங்களை அவர்களும் பின்பற்றத் தானே வேண்டும்.
“சார் எல்லா பேப்பரும் சரியாத்தானே இருக்கு. அப்புறம் எதுக்கு சார், நீங்க எதையும் கொடுக்காம தர்க்கம் பண்ணிட்டு இருக்கீங்க?”
கேஷவ் விமான நிலைய உயரதிகாரியிடம் வாதம் செய்ய,
ரானாவின் கைக்கூலியான அவனோ, “இங்கே பாருங்க கேஷவ்! எங்களுக்குன்னு சில ப்ரோசிஜர்ஸ் இருக்கு. அதுபடி தான் என்னால் வே�... See more
உத்திரபிரேதேசத்தில் வாழும் இரண்டு தாதாக்களின் மோதல்களும் அதற்கிடையில் மலரும் அவர்களின் காதலும் நிறைந்ததே இந்த கதை...
கதையிலிருந்து ஒரு குட்டி டீஸர்
லால்பகதூர் சர்வதேச விமான நிலையம்
என்னதான் மொத்த உத்திரபிரேதசமும் ராத்தோர் குடும்பத்தின் கைவசம் இருந்தாலும், சில சட்டங்களை அவர்களும் பின்பற்றத் தானே வேண்டும்.
“சார் எல்லா பேப்பரும் சரியாத்தானே இருக்கு. அப்புறம் எதுக்கு சார், நீங்க எதையும் கொடுக்காம தர்க்கம் பண்ணிட்டு இருக்கீங்க?”
கேஷவ் விமான நிலைய உயரதிகாரியிடம் வாதம் செய்ய,
ரானாவின் கைக்கூலியான அவனோ, “இங்கே பாருங்க கேஷவ்! எங்களுக்குன்னு சில ப்ரோசிஜர்ஸ் இருக்கு. அதுபடி தான் என்னால் வேலை செய்யமுடியும்… இப்போதைக்கு என்னால அந்த டெட் பாடிஸை உங்க கிட்ட கொடுக்க முடியாது” என்று கறார் குரலில் கூறி ராத்தோர் ஆட்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்தான்!
‘இது சரி வராது’ என்ற முடிவுக்கு வந்த கேஷவ் சற்றுத்தள்ளி போய் போனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்து பேசிவிட்டு வந்தான்!
“யாருக்கு பையா கால் பண்ணீங்க?” என்று அருகில் இருந்தவன் கேஷவ்விடம் கேட்க,
“யாருக்கு பண்ணணுமோ? அவனுக்கு!!!” என்று அழுத்தமாய் சொன்னவனின் விழிகள் மட்டும் அந்த உயர் அதிகாரியை பார்க்கவில்லை!அவனைக்கேட்டவனும் அந்த உயர் அதிகாரியைத் தான் திரும்பிப் பார்த்தான்.
‘பின்னே? வருபவன் என்ன சாதாரண ஆளா?? தங்களின் சர்க்காராவது யார் மீதும் கைவைக்கும் முன் கொஞ்சம் யோசிப்பார். ஆனால் வருபவனோ கை வைத்துவிட்டுத் தான் ‘என்ன பிரச்சனை?’ என்று கேட்கவே செய்வான்!!!’
அவனின் எண்ணத்தை மெய்பிப்பது போல சூறாவளி காற்றாய் விமான நிலையத்தில் நுழைந்தவன், தனது சட்டையின் பின்புறம் இருந்து எடுத்த துப்பாக்கியை லோட் செய்தபடியே, அந்த உயர் அதிகாரி இருக்கும் பகுதிக்கு ஆக்ரோஷமாக வர, அங்கிருந்த அனைவரின் கண்களும் அவனைத்தான் பார்த்து இருந்தது கண்களில் பீதியுடன்….
விமான நிலைய பாதுகாவலர்கள் தாழ்வான குரலில் “சார் இங்கே துப்பாக்கியுடன் உள்ளே வரக்கூடாது”, என்று அழுத்தமாய் சொன்னபடி வந்தவனை பின் தொடர ஆரம்பித்தனர்!
அதையெல்லாம் கருத்தில் கொள்ளாதவனின் கண்களோ, சுற்றிச் சுழன்று சற்றுத்தொலைவில் நின்றிருந்த கேஷவ்வின் மீது பதிய, அவனது கண்கள் வந்தவனுக்கு தேவையான பதிலைத்தர, மறுநொடி துப்பாக்கியின் தோட்டாக்கள் அதிகாரியின் இரண்டு கால்களையும் முத்தமிட்டுக் கொண்டிருந்தது!
உயிர் போகும் வலியுடன் கத்திய அதிகாரி நிற்கமுடியாது கீழே மண்டியிட்டு சரிய, அவன் தலை வணங்கிய இடத்தில் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் விஜயேந்தர் சிங் ராத்தோர்.
ஊரைக் காக்கும் பெண் புலியான ராணி மாய்யின் கடைசி ரத்தம்!!! ஊரை ஆளும் வீரேந்தர் சிங் ரத்தோரின் தம்பி!!!
அந்த அதிகாரியோ உயிர் பயத்தில், “என்னைக் கொன்னுடாத… கொன்னுடாத…” என்று அழுகையுடன் கதற,
“இன்னும் அஞ்சு நிமிஷத்தில எங்க அண்ணா சவப்பெட்டி வெளில வரணும். இல்லன்னா... ஆறாவது நிமிஷம் உன் பாடி இங்கேயிருந்து வெளியே போகும்!!!” என்று துப்பாக்கியை விஜய் அதிகாரியை நோக்கி நீட்ட,
அடுத்த நொடி தன் உதவியாளனை கத்தி அழைத்தவன், ரத்ததோடும் பயத்தோடும் அவன் கையில் இருந்த பேப்பரில் தன் கையெழுத்தை இட்டான்.
இதுதான் விஜயேந்தர்! பொறுமை என்பதே அவன் அகராதியில் இல்லை. அண்ணனின் மீது அளவில்லா அன்பு கொண்டவனுக்கு, அவனின் வார்த்தைகளே வேதம்!
தன் அண்ணனுக்கு எதிராக ஒருவன் குரல் கொடுத்தாலே, அவன் குரல்வளையை இல்லாது செய்பவன், அவனை எதிர்த்து நின்றால் விடுவானா?
புயல் போல வந்து, அந்த இடத்தை புரட்டிப் போட்டுவிட்டு “போலாம் கேஷவ்” என்று கூலாக சொன்னவன் அறியவில்லை.
மருண்ட விழிகள் இரண்டு, அச்சத்தில் உறைந்து போய் அவனையே கண்டிருந்ததை!!!
அன்புடன்,
வான்மதி ஹரி