இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கானோர், பூரண அபரிமிதத்தோடுகூடிய வாழ்க்கையை வாழ அருளியுள்ளார். மஹாத்ரயாவையும் அவருடைய ஞானத்தையும் அனுபவிப்பது என்பது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒன்றாகும். அது மக்கள், ஆரோக்கியம், செல்வம், அன்பு, பேரானந்தம், ஆன்மிகப் பிணைப்பு ஆகியவை தொடர்பாகத் தங்களிடம் படிந்து போயுள்ள நம்பிக்கை அமைப்பு முறைகளை மீறி வர அவர்களுக்கு உதவுகிறது. தொழிலதிபர்களிடமிருந்து, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தொகுத்து வழங்குகின்ற செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற தொழில்முனைவோர்கள், மக்களுடைய அபிப்பிராயங்களில் தாக்கம் ஏற்படுத்துகின்றவர்கள், விருதுப... See more
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கானோர், பூரண அபரிமிதத்தோடுகூடிய வாழ்க்கையை வாழ அருளியுள்ளார். மஹாத்ரயாவையும் அவருடைய ஞானத்தையும் அனுபவிப்பது என்பது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒன்றாகும். அது மக்கள், ஆரோக்கியம், செல்வம், அன்பு, பேரானந்தம், ஆன்மிகப் பிணைப்பு ஆகியவை தொடர்பாகத் தங்களிடம் படிந்து போயுள்ள நம்பிக்கை அமைப்பு முறைகளை மீறி வர அவர்களுக்கு உதவுகிறது. தொழிலதிபர்களிடமிருந்து, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தொகுத்து வழங்குகின்ற செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற தொழில்முனைவோர்கள், மக்களுடைய அபிப்பிராயங்களில் தாக்கம் ஏற்படுத்துகின்றவர்கள், விருதுபெற்ற இசைக் கலைஞர்கள், பிரபலமான விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள்வரை எண்ணற்றோர் மேம்பட வழிகாட்டியுள்ளார். அனுபவபூர்வமானதாகவும், சமகாலத்தியமானதாகவும், நகைச்சுவை தூவப்பட்ட ஒன்றாகவும் விளங்குகின்ற அவருடைய கற்பிக்கும் முறை, ஒருவருடைய வயது, சமூ அந்தஸ்து, புவியியல் எல்லைகளை அனைத்தையும் தாண்டி அனைவருக்கும் உத்வேகம் ஊட்டுகின்ற ஒன்றாகும். மனத்திற்கும் இதயத்திற்கும் அறைகூவல் விடுத்து, வாழ்க்கையின் முரண்பாடுகள் மற்றும் மர்மங்களுக்குப் பின்னாலுள்ள ‘ஏன்’ என்பதற்கு விளக்கமளித்து, ஓர் உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்தி, ‘வாழ்க்கை அழகானது’ என்பதை நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் இலட்சக்கணக்கான தனிநபர்களும் அனுபவரீதியாக உணர அவர் உதவியுள்ளார். மஹாத்ரயா வாழ்க்கையையும் தன்னையும் எப்போதும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். அவர் பாதையை முறிப்பவராக இருப்பதாலேயே புதிய பாதையைக் கண்டுபிடிப்பவராகவும் விளங்குகிறார். அவர் ஒரு சகாப்தம் . . . .