2009ல் முதன்முதலாக அவர் கொடுத்த ‘டெட்’ சொற்பொழிவில்தான் ‘ஏன்’ என்ற கோட்பாட்டை சைமன் சினெக் பிரபலப்படுத்தினார். உலகம் நெடுகிலும் சுமார் நான்கு கோடி மக்கள் பார்த்த அந்தச் சொற்பொழிவுக்கு 48 மொழிகளில் மொழிபெயர்ப்புரை வழங்கப்பட்டது. தலைமைத்துவத்தையும் வியாபாரத்தையும் பற்றிய அவருடைய புதுமையான கண்ணோட்டங்கள் சர்வதேச அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தன. அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டிஸ்னி ஆகியவற்றில் தொடங்கி, பெருநிறுவனங்கள் மற்றும் காவல்துறைவரை, அவர் பல இடங்களிலும் சொற்பொழிவாற்ற அழைக்கப்படுகிறார். ஐக்கிய நாடுகள் சபையிலும் அவர் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதோடு, அமெரிக்கக் காங்க... See more
2009ல் முதன்முதலாக அவர் கொடுத்த ‘டெட்’ சொற்பொழிவில்தான் ‘ஏன்’ என்ற கோட்பாட்டை சைமன் சினெக் பிரபலப்படுத்தினார். உலகம் நெடுகிலும் சுமார் நான்கு கோடி மக்கள் பார்த்த அந்தச் சொற்பொழிவுக்கு 48 மொழிகளில் மொழிபெயர்ப்புரை வழங்கப்பட்டது. தலைமைத்துவத்தையும் வியாபாரத்தையும் பற்றிய அவருடைய புதுமையான கண்ணோட்டங்கள் சர்வதேச அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தன. அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டிஸ்னி ஆகியவற்றில் தொடங்கி, பெருநிறுவனங்கள் மற்றும் காவல்துறைவரை, அவர் பல இடங்களிலும் சொற்பொழிவாற்ற அழைக்கப்படுகிறார். ஐக்கிய நாடுகள் சபையிலும் அவர் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதோடு, அமெரிக்கக் காங்கிரஸ், அமெரிக்கக் கடற்படை, விமானப்படை, ராணுவம், கடலோரப் பாதுகாப்பு படை ஆகியவற்றின் மூத்தத் தலைவர்களுக்கு இடையேயும் அவர் சொற்பொழிவாற்றியுள்ளார். விற்பனையில் பல சாதனைகளைப் படைத்தப் பல நூல்களை சைமன் எழுதியுள்ளார்.