ஸ்கிப் பிரிச்சர்டு ஒரு வெற்றிகரமான நிறுவனத் தலைவரும் பேச்சாளரும் ஆவார். தோல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிறுவனங்களை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் இலாபகரமாக இயங்க வைப்பதில் கைதேர்ந்த அவர், ‘இங்க்’ பத்திரிகையால் அமெரிக்காவின் தலைசிறந்த 100 பேச்சாளர்களில் ஒருவர் என்று புகழப்பட்டவர். தலைமைத்துவம், தனிநபர் மேம்பாடு உட்படப் பல தலைப்புகளில் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் அவர். ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ அவரை ‘அயராத கொடையாளியாகவும்,’ ‘சிறந்த முன்மாதிரியாகவும்’ திகழ்கின்ற தலைமை நிர்வாகி என்று அழைத்து அவரைக் கௌரவித்துள்ளது. அவர் நடத்தி வருகின்ற ‘லீடர்ஷிப் இன்சைட்ஸ்’ என்ற வலைப... See more
ஸ்கிப் பிரிச்சர்டு ஒரு வெற்றிகரமான நிறுவனத் தலைவரும் பேச்சாளரும் ஆவார். தோல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிறுவனங்களை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் இலாபகரமாக இயங்க வைப்பதில் கைதேர்ந்த அவர், ‘இங்க்’ பத்திரிகையால் அமெரிக்காவின் தலைசிறந்த 100 பேச்சாளர்களில் ஒருவர் என்று புகழப்பட்டவர். தலைமைத்துவம், தனிநபர் மேம்பாடு உட்படப் பல தலைப்புகளில் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் அவர். ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ அவரை ‘அயராத கொடையாளியாகவும்,’ ‘சிறந்த முன்மாதிரியாகவும்’ திகழ்கின்ற தலைமை நிர்வாகி என்று அழைத்து அவரைக் கௌரவித்துள்ளது. அவர் நடத்தி வருகின்ற ‘லீடர்ஷிப் இன்சைட்ஸ்’ என்ற வலைப்பக்கம் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளது. அமெரிக்க அரசுச் செயலாளர் கான்டோலீசா ரைஸ், பத்திரிகையாளர் டேன் ராத்தர், பிரபல பேஸ்பால் வீரர் ஜான் ஸ்மோல்ட்ஸ் உட்படப் பல பிரபலங்களை அவர் தன் வலைப்பக்கத்திற்காக நேர்காணல் செய்துள்ளார். அவருடைய கருத்துகள், பிபிசி, நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ, பப்ளிஷர்ஸ் வீக்லி உட்பட எண்ணற்ற அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. அவர் தன் மனைவி அனிட்டாவுடனும் தன் மகள் ஜாயுடனும் அமெரிக்காவில் வசித்து வருகிறார். www.skipprichard.com என்ற வலைத்தளத்தின் வாயிலாக நீங்கள் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.