‘நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி’ என்ற நூலை உங்களிடம் கொண்டுவந்து சேர்த்த வல்லுநர்கள் படைத்துள்ள இந்தப் புரட்சிகரமான புத்தகத்தின் உதவியுடன் உங்கள் எதிர்காலத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவாருங்கள். உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், உறவுகள், மற்றும் எதிர்காலத்தை நீங்கள் அணுகுகின்ற விதத்தை மாற்றுவதன் மூலம் ஒரு நோக்கத்துடன்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவக்கூடிய சக்திவாய்ந்த கருவிகளையும், காலங்காலமாகப் பலனளித்து வந்துள்ள வழிமுறைகளையும் இந்நூல் வழங்குகிறது. ஆழமான ஆராய்ச்சிகள், உயர்ந்த செயல்திறனுடன்கூடிய நூற்றுக்கும் மேற்ப... See more
‘நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி’ என்ற நூலை உங்களிடம் கொண்டுவந்து சேர்த்த வல்லுநர்கள் படைத்துள்ள இந்தப் புரட்சிகரமான புத்தகத்தின் உதவியுடன் உங்கள் எதிர்காலத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவாருங்கள். உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், உறவுகள், மற்றும் எதிர்காலத்தை நீங்கள் அணுகுகின்ற விதத்தை மாற்றுவதன் மூலம் ஒரு நோக்கத்துடன்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவக்கூடிய சக்திவாய்ந்த கருவிகளையும், காலங்காலமாகப் பலனளித்து வந்துள்ள வழிமுறைகளையும் இந்நூல் வழங்குகிறது. ஆழமான ஆராய்ச்சிகள், உயர்ந்த செயல்திறனுடன்கூடிய நூற்றுக்கும் மேற்பட்டத் தலைவர்களுடனான நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களுடைய உண்மையான ஆற்றலைக் கட்டவிழ்ப்பதற்கான உத்திகளை இந்நூல் விவரிக்கிறது. டேல் கார்னகியின் ஞானம், ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, மனநிறைவு தருகின்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு உலகம் நெடுகிலும் உள்ள மக்களுக்கு உதவி வந்துள்ளது. இப்போது, அவருடைய அனைத்துப் பயிற்சிகளையும் காலத்தால் அழியாத கொள்கைகளையும் ஒரு கோர்வையாகத் தொகுத்திருக்கின்ற இந்நூல், மனித உறவுகளைக் கையாளும் கலை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அனைத்து விஷயங்களையும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.