டாரியஸ் ஃபோரூ ஒரு தொழில்முனைவர், வலைப்பதிவாளர், மற்றும் வலையொலிப்பதிவாளர். 2015 ஆம் ஆண்டு முதலாக, வாழ்க்கை, தொழில், உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பற்றிய தன்னுடைய கருத்துகளை அவர் தன்னுடைய வலைப்பதிவில் பதிவு செய்து வந்துள்ளார். இப்போதுவரை நாற்பது இலட்சம் மக்கள் இவருடைய கட்டுரைகளைப் படித்துள்ளனர். 2010 ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய மார்க்கெட்டிங் தொடர்பான முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்து கொண்டிருந்த நேரத்தில், தன் தந்தையுடன் சேர்ந்து ‘வார்ட்டெக்ஸ்’ என்ற சலவைத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நிறுவினார். ‘த டாரியஸ் ஃபோரூ ஷோ’ என்ற அவருடைய வலையொலிப்பதிவு நிகழ்ச்சிக்காக, ரயன் ஹாலிடே, ராபர்ட் சட்டன... See more
டாரியஸ் ஃபோரூ ஒரு தொழில்முனைவர், வலைப்பதிவாளர், மற்றும் வலையொலிப்பதிவாளர். 2015 ஆம் ஆண்டு முதலாக, வாழ்க்கை, தொழில், உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பற்றிய தன்னுடைய கருத்துகளை அவர் தன்னுடைய வலைப்பதிவில் பதிவு செய்து வந்துள்ளார். இப்போதுவரை நாற்பது இலட்சம் மக்கள் இவருடைய கட்டுரைகளைப் படித்துள்ளனர். 2010 ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய மார்க்கெட்டிங் தொடர்பான முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்து கொண்டிருந்த நேரத்தில், தன் தந்தையுடன் சேர்ந்து ‘வார்ட்டெக்ஸ்’ என்ற சலவைத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நிறுவினார். ‘த டாரியஸ் ஃபோரூ ஷோ’ என்ற அவருடைய வலையொலிப்பதிவு நிகழ்ச்சிக்காக, ரயன் ஹாலிடே, ராபர்ட் சட்டன், ஜிம்மி சோனி, மற்றும் பல பிரபலங்களை அவர் பேட்டி கண்டுள்ளார்.