சுயமுன்னேற்றத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான லெஸ் கிப்லின், 1965 இல், அந்த ஆண்டுக்கான அமெரிக்கத் தேசிய விற்பனையாளர் விருதை வென்றவர். 1968 இல் அவர் எழுதி வெளியிட்ட ‘மக்களைக் கையாளும் திறன்’ என்ற நூல், ஒரு கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுச் சாதனைப் படைத்தது. 1979 இல் வெளியான இப்புத்தகம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இப்போது திருத்தப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. லெஸ் கிப்ளின் எண்ணற்றப் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மக்களைக் கையாளும் கலையில் பயிற்சி அளித்துள்ளார். தலைமுறைகளைக் கடந்து நிற்கின்ற லெஸ் கிப்ளினின் உத்திகள், சமூக ஊடகங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகிற்கும்... See more
சுயமுன்னேற்றத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான லெஸ் கிப்லின், 1965 இல், அந்த ஆண்டுக்கான அமெரிக்கத் தேசிய விற்பனையாளர் விருதை வென்றவர். 1968 இல் அவர் எழுதி வெளியிட்ட ‘மக்களைக் கையாளும் திறன்’ என்ற நூல், ஒரு கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுச் சாதனைப் படைத்தது. 1979 இல் வெளியான இப்புத்தகம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இப்போது திருத்தப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. லெஸ் கிப்ளின் எண்ணற்றப் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மக்களைக் கையாளும் கலையில் பயிற்சி அளித்துள்ளார். தலைமுறைகளைக் கடந்து நிற்கின்ற லெஸ் கிப்ளினின் உத்திகள், சமூக ஊடகங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகிற்கும் பொருத்தமானதாகவே விளங்குகின்றன. மக்களைக் கையாளும் கலையின் மாமன்னனான லெஸ் கிப்ளினின் அறிவுரைகளைப் பயன்படுத்தி உங்களுடைய வாழ்வில் வெற்றிகளைக் குவியுங்கள்.