தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள "உதவி சிறை அலுவலர்" (Assistant Jailor) (ஆண்கள்/பெண்கள்) தேர்வுக்கான கையேடு இது. மிக சமீபத்தில் வெளியான இந்த கையேடு மொத்தம் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு :- தாள் - I : பாடத்தாள் (Subject Paper). இந்த தாளில் பின்வரும் பாடத்தலைப்புகளில் இருந்து கொள்குறிவகை வினா விடைகள் தரப்பட்டுள்ளன. (1) இந்திய அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் (2) மத்திய, மாநிலங்களின் குறிப்பாக தமிழ்நாட்டின் நிருவாகம் (3) இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் (4) மற்றும் (5) தேசிய, மாநில நிகழ்வுகள் | தாள் - II : இந்த தாள் ... See more
தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள "உதவி சிறை அலுவலர்" (Assistant Jailor) (ஆண்கள்/பெண்கள்) தேர்வுக்கான கையேடு இது. மிக சமீபத்தில் வெளியான இந்த கையேடு மொத்தம் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு :- தாள் - I : பாடத்தாள் (Subject Paper). இந்த தாளில் பின்வரும் பாடத்தலைப்புகளில் இருந்து கொள்குறிவகை வினா விடைகள் தரப்பட்டுள்ளன. (1) இந்திய அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் (2) மத்திய, மாநிலங்களின் குறிப்பாக தமிழ்நாட்டின் நிருவாகம் (3) இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் (4) மற்றும் (5) தேசிய, மாநில நிகழ்வுகள் | தாள் - II : இந்த தாள் பகுதி அ மற்றும் பகுதி ஆ என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி அ-வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வுக்கான பாடங்களும் பயிற்சி கொள்குறிவகை வினாக்களும் தரப்பட்டுள்ளன. அந்த வகையில் இது இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் என்ற மூன்று தலைப்புகளை உள்ளடக்குகின்றது. பகுதி ஆ-வில் பொது அறிவு மற்றும் திறனாய்வுத் தேர்வுக்கான பாடங்களும் பயிற்சி கொள்குறிவகை வினாக்களும் தரப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக இந்த கையேட்டில் முந்திய தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டிருப்பது இந்த தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு ஓர் திசை காட்டும் கருவியாக உள்ளது என்றால் அது மிகையன்று. அந்த வகையில் இதில், 2022 (26/12/2022), 2019 (22/12/2019), 2019 (06/01/2019), 2017, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளின் வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு அதற்கான விடைகள் அந்தந்த பக்கத்தின் கீழ் பகுதியிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. உதவி சிறை அலுவலர் பதவிக்கான தேர்வு எழுதுவோருக்கு இந்தக் கையேடு பெரிதும் பயன் தரும்.