புவிப்புறவியல், காலநிலையியல், பேராழியியல், உயிரியற்புவியியல், குடியிருப்புப் புவியியல், மக்கட்பரப்பியல் என ஆறு நூல்களைத் தொடர்ந்து வர்த்தமானன் பதிப்பகம் ஏழாவது நூலாக இந்த "சுற்றுப்புறச் சூழல் புவியியல்" எனும் நூலை எளிய தமிழில், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் இளம் சமுதாயத்தினரின் தேவைகளை மனதில் கொண்டும், இள நிலை மற்றும் முது நிலை அறிவியல் பட்டப்படிப்பில் புவியியலை முதன்மைப் பாடமாகத் தெரிவு செய்து கற்று வரும் மாணவர்கட்கு பயன் தரும் வகையிலும், வெளியிட்டுள்ளது. மனித வாழ்க்கை என்பது காலத்தின் போக்கில் எந்திரகதியாக மாறியது. எதிலும் வேகம், எதுவும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற மனப்�... See more
புவிப்புறவியல், காலநிலையியல், பேராழியியல், உயிரியற்புவியியல், குடியிருப்புப் புவியியல், மக்கட்பரப்பியல் என ஆறு நூல்களைத் தொடர்ந்து வர்த்தமானன் பதிப்பகம் ஏழாவது நூலாக இந்த "சுற்றுப்புறச் சூழல் புவியியல்" எனும் நூலை எளிய தமிழில், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் இளம் சமுதாயத்தினரின் தேவைகளை மனதில் கொண்டும், இள நிலை மற்றும் முது நிலை அறிவியல் பட்டப்படிப்பில் புவியியலை முதன்மைப் பாடமாகத் தெரிவு செய்து கற்று வரும் மாணவர்கட்கு பயன் தரும் வகையிலும், வெளியிட்டுள்ளது. மனித வாழ்க்கை என்பது காலத்தின் போக்கில் எந்திரகதியாக மாறியது. எதிலும் வேகம், எதுவும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை அனைவருக்கும் தொற்றிக்கொண்டது. விளைவு, இன்றைய மனித வாழ்க்கை முறை இயற்கைக்கு எதிரான ஒன்றாக மாறிவிட்டது. மனிதன் தனது செயல்களால் இயற்கைக்கு தீங்கு விளைவித்தான்; அது இன்று அவனுக்கு தீங்கு விளைவித்து வருகின்றது. அதில் முதலிடம் வகிப்பது சுற்றுப்புறச்சூழலும், அது மனித செயல்களால் மாசடைந்து, அந்த மாசுக்கள் திரும்ப மனித சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பதும் ஆகும். சுற்றுச்சூழல் மாசடைவதை முற்றிலும் தடுத்து நிறுத்த இயலவில்லை. அந்த மாசுடனேயே மனிதன் வாழ்கின்றான் அல்லது தன்னை தற்காத்து வாழ்கின்றான். எனவே இன்றைய மனித சமுதாயம் தனது சுற்றுப்புறத்தில் மகிழ்ச்சியாக உள்ளதா என்ற கேள்விக்கு 'உள்ளது' என்று சட்டென பதில் அளித்து விட இயலாது. நாம் இந்த புவியில் எந்த இடத்தில் வசித்தாலும், அந்த இடத்தின் சுற்றுப்புற சூழல் நமது வாழ்க்கை முறையை ஆளுகை செய்கின்றது அல்லது வழிநடாத்துகின்றது எனலாம். காரணம் சுற்றுப்புற சூழல் என்பது அந்தந்த இடத்தை பொறுத்து மாறுபடுவதாகும். இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.