‘எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர்’ - இந்த இரு சொற்றொடர்களுக்கு இடையே நிகழ்ந்திருக்கக் கூடிய மனப் போராட்டம் என்ன, நெகிழ்ச்சி என்ன, நயம் என்ன, உணர்வோட்டம் என்ன என்றெல்லாம் ஆராய்ந்ததன் பலன்தான், இந்த ‘கதை கேளு ராமாயண கதை கேளு’ பல்வேறு ஆன்மிக சொற்பொழிவாளர்கள் கேட்போர் களிப்புறும் வகையில் ராமாயணத்தைத் தத்தமது கற்பனை ஆற்றலாலும், சொற்திறத்தாலும் தம் எதிரே அமர்ந்திருப்பவரை அப்படி, இப்படித் திரும்பவிடாமல் நிலைக்கச் செய்கிறார்கள் என்றால், அதற்கு, ஆக்கபூர்வமான கற்பனைக்கு தாராளமாக இடமளிக்கும் ராமாயணத்தின் சாரமே பிரதான காரணம்.