"கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை" எனும் இந்நூலின் ஆசிரியர் நாடறிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அலுவலரான திரு. உ. சகாயம். இந்நூல் இன்றைய அரசு நிர்வாகம் தொடர்பான அசலானப் பதிவு. அஞ்சாது நிஜத்தைச் சொல்லும் அசத்தலான படைப்பு. கிரானைட் முறைகேட்டால் பல்லாயிரக்கனக்கான கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என அறிக்கை அளித்தவர் இந்நூலாசிரியர். இந்த பின்புலத்தில் இவர் கம்பீரமான மதுரை மாவட்ட கலெக்டர் பதவியிலிருந்து நட்டத்தில் நலிந்து போன கோஆப்டெக்ஸ்க்கு தூக்கி எறியப்படுகிறார். அந்த கோஆப்டெக்ஸ் களமே இந்த கனமானப் படைப்பிற்கு கருவும், உருவும் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் உழைக்கும் எளிய நெசவுக்குடிகளின் நெருக்�... See more
"கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை" எனும் இந்நூலின் ஆசிரியர் நாடறிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அலுவலரான திரு. உ. சகாயம். இந்நூல் இன்றைய அரசு நிர்வாகம் தொடர்பான அசலானப் பதிவு. அஞ்சாது நிஜத்தைச் சொல்லும் அசத்தலான படைப்பு. கிரானைட் முறைகேட்டால் பல்லாயிரக்கனக்கான கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என அறிக்கை அளித்தவர் இந்நூலாசிரியர். இந்த பின்புலத்தில் இவர் கம்பீரமான மதுரை மாவட்ட கலெக்டர் பதவியிலிருந்து நட்டத்தில் நலிந்து போன கோஆப்டெக்ஸ்க்கு தூக்கி எறியப்படுகிறார். அந்த கோஆப்டெக்ஸ் களமே இந்த கனமானப் படைப்பிற்கு கருவும், உருவும் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் உழைக்கும் எளிய நெசவுக்குடிகளின் நெருக்கடியான வாழ்வுச் சூழலைக் நேரில் கண்டு கலங்கிப்போன இந்நூலாசிரியர் வேட்டி தினம் உள்ளிட்ட புதுமையான முயற்சிகளால் கோஆப்டெக்ஸை இலாப நிலைக்கு இலாவகமாக நகர்த்துகிறார். இந்தச் சூழலில் அறமற்ற ஊழல் மிகுந்த அரசு நிர்வாகத்தின் அச்சாணிகளான அமைச்சர், உயர் அலுவலர்கள் ஆகியோருக்கு எதிரான சமரசமற்ற சமரை நடத்த வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டதை விறுவிறுப்பாய் விளக்குகிறார் இவர். அன்று வல்லமை வாய்ந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவிடம் உள்ளதைச் சொல்லும் உரம் கொண்டவர் இவ்வாசிரியர். இவரது "கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை" நம் நாட்டின் அரசுப் பொறுப்புகளில் சேர்ந்து பணி செய்யத்துடிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அலுவலர்கள், அரசியல் தளத்தில் ஆர்வம் காட்டும் வெகுமக்கள் ஆகியோருக்கு அரசு நிர்வாகச் செயல்பாடுகளை விளக்கிக் காட்டும் படமாகும். வேட்கையோடு கற்கும் பாடமாகும். எளியோரை கண்டு கசிந்துருகி வரம்புமீறும் வலியோர்க்கு எதிராய் களம் காணும் இந்த தமிழர் இன்றைய காலத்தில் காணமுடியாத ஓர் அபூர்வம். இவரது இந்த படைப்பு தமிழர்கள் பருக நாம் தரும் அமிழ்தம். இந்த படைப்பை வெளியிடுவதில் அப்பா பதிப்பகம் பெருமையும், எழிச்சியும் கொள்கிறது.