சமூக நலனில் அதிக அக்கறைகொள்ளவும் பாரதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்யவும் இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் முன்வர இந்தப் புத்தகம் உந்துவிசையாக இருக்கும்.’
- சாய் தீபக்
அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது.
- அரவிந்தன் நீலகண்டன்
ஒரு தவறான அரசியல்வாதி தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அவருடைய அல்லது அந்தக் கட்சியின் பிரச்னை. எல்லா மக்கள் பிரதிநிதிகளுமே மோசமானவர்கள்தான்; எல்லா நேரங்களிலும் எல்லா தேர்தல்களிலும் அப்�... See more
சமூக நலனில் அதிக அக்கறைகொள்ளவும் பாரதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்யவும் இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் முன்வர இந்தப் புத்தகம் உந்துவிசையாக இருக்கும்.’
- சாய் தீபக்
அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது.
- அரவிந்தன் நீலகண்டன்
ஒரு தவறான அரசியல்வாதி தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அவருடைய அல்லது அந்தக் கட்சியின் பிரச்னை. எல்லா மக்கள் பிரதிநிதிகளுமே மோசமானவர்கள்தான்; எல்லா நேரங்களிலும் எல்லா தேர்தல்களிலும் அப்படித்தான் என்று சொன்னால் பிரச்னை நம் மீதுதான் இருக்கிறது. பழியை அரசியல்வாதிகள் மீது போட்டுவிட்டு நாம் தப்பிக்கமுடியாது.
இந்நிலைக்கு மாற்று எதுவும் இல்லை. அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். அப்படி வாக்காளர்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பதென்பது நீண்ட நெடிய பயணம்.
இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது. அரசியல்வாதி, கட்சி அல்லது தலைவர் எல்லாம் தாற்காலிகமே. அரசியல் விழிப்புணர்வே நிரந்தரமானது. அது ஒரு தனி நபரின் சிந்தனையாக, கருத்தாக இருந்தால் போதாது. மாற்றத்தை முன்னெடுக்கவேண்டியவர்களான நம் அனைவருடைய கூட்டு முயற்சியாகப் பரிணமிக்கவேண்டும்.