உலக வரலாற்றின் மிகமூத்த ஆயுதங்களுக்கு உரிய தரமான இரும்பு கிடைத்த இடம், அந்த ஆயுதங்கள் பிறந்த இடம் கொங்கு. குறுநில மன்னர்களிடம் இருந்த ஆயுதத் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டவர்கள் சேரர்கள், அதனால்தான் அவர்கள் கொங்கில் நிலைப்பெற்று கொங்கு சேரர்களாகினர். பண்டைய தமிழகத்தில் இரும்பை உருக்க ஒருவிதமான உலைக்கலனும், எஃகை உருக்க இன்னொரு வகையான உலைக்கலனும் பயன்படுத்தப்பட்டதை அகழாய்வுகள் காட்டுகின்றன. கொடுமணலில் இன்றும் இந்த 2 வகையான உலைக்கலன்கள் காணப்படுகின்றன. சேரரின் துருப்பிடிக்காத இரும்பு பற்றிய குறிப்புகள் எகிப்து, கிரேக்கம், ரோமானியம், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளின் வரலாறுகளில் கா�... See more
உலக வரலாற்றின் மிகமூத்த ஆயுதங்களுக்கு உரிய தரமான இரும்பு கிடைத்த இடம், அந்த ஆயுதங்கள் பிறந்த இடம் கொங்கு. குறுநில மன்னர்களிடம் இருந்த ஆயுதத் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டவர்கள் சேரர்கள், அதனால்தான் அவர்கள் கொங்கில் நிலைப்பெற்று கொங்கு சேரர்களாகினர். பண்டைய தமிழகத்தில் இரும்பை உருக்க ஒருவிதமான உலைக்கலனும், எஃகை உருக்க இன்னொரு வகையான உலைக்கலனும் பயன்படுத்தப்பட்டதை அகழாய்வுகள் காட்டுகின்றன. கொடுமணலில் இன்றும் இந்த 2 வகையான உலைக்கலன்கள் காணப்படுகின்றன. சேரரின் துருப்பிடிக்காத இரும்பு பற்றிய குறிப்புகள் எகிப்து, கிரேக்கம், ரோமானியம், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளின் வரலாறுகளில் காணப்படுகின்றது. வட இந்தியாவின் பேரரசர்களான மவுரியர்கள் தமிழகத்தின் குறுநில மன்னனின் ஆயுதத்தைக் கண்டு திரும்பி ஓடி இருக்கிறார்கள்!. மவுரியர்கள் கால இந்திய வரைபடத்தில் தமிழகம் மட்டும் அவர்களால் வெல்லப்படாமல் இருந்தது. இதன் காரணம் நமது ஆயுத பலம்!. கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இடைக்காலச் சேரர்கள் வெளியிட்ட நாணயங்களில் பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளின் அடிப்படை வடிவமைப்புகள் காணப்படுகின்றன.