இந்நூல் தென்னிந்திய வரலற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயல்கின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. நாட்டின் வரலாறானது, மக்களது வாழ்க்கை நிலை, சமூக நிலை, நாகரிக நிலை முதலியவற்றை நன்கு விளக்க வேண்டுமென்பதை இன்று யாவரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். இக் கருத்தைத் தழுவியே இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. ஆகையால், மன்னர் வரலாறுகள், போர் நிகழ்ச்சிகள், அரசியல் ஒப்பந்தங்கள் முதலியன விரிவாகக் கூறப்பெற்றில. சமூக வரலாற்றை அறிவதற்கு இன்றியமையாத அரசியல் குறிப்புகள் மட்டுமே இதன்கண் இடம் பெற்றுள்ளன. சமூக வரலாற்றிலே தானும் எல்லாக் கால�... See more
இந்நூல் தென்னிந்திய வரலற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயல்கின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. நாட்டின் வரலாறானது, மக்களது வாழ்க்கை நிலை, சமூக நிலை, நாகரிக நிலை முதலியவற்றை நன்கு விளக்க வேண்டுமென்பதை இன்று யாவரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். இக் கருத்தைத் தழுவியே இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. ஆகையால், மன்னர் வரலாறுகள், போர் நிகழ்ச்சிகள், அரசியல் ஒப்பந்தங்கள் முதலியன விரிவாகக் கூறப்பெற்றில. சமூக வரலாற்றை அறிவதற்கு இன்றியமையாத அரசியல் குறிப்புகள் மட்டுமே இதன்கண் இடம் பெற்றுள்ளன. சமூக வரலாற்றிலே தானும் எல்லாக் காலத்தையும் பற்றிய தகுந்த ஆதாரங்கள் கிடைத்தில. தென்னிந்திய மக்கள் வரலாறுபற்றி இதுகாறும் நூல்கள் பல வெளி வந்திலாமையால், இந்நூலை உருவாக்கும் முயற்சியில் பற்பல இன்னல்கள் தோன்றியுள்ளன. எனினும், நாளடைவில் இன்னும் பல நூல்கள் இத்துறையில் தோன்றுவதற்கு இது ஊக்கம் அளிக்குமென்னும் நம்பிக்கையுடன் இதனைத் தமிழுலகில் வெளியிடுகின்றோம். சென்னை ஆக்கியோன் 9-4-1958