வன விலங்குகள்மீதும் சூழலியல்மீதும் ஆர்வம் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம். சலசலத்து ஓடும் ஆற்று நீரைக் கண்டு மயங்கி நிற்கும்போது, தொலைவில் ஒரு யானை பிளிறும் சத்தம் கேட்கும். அதை ஊன்றி கவனிக்கும்போது சிறுத்தையின் குரல் உலுக்கும். சில நிமிடங்களில் ஏதோ ஒரு விலங்கு நீர் அருந்த வரும். ஆந்தைகள் அலறும். காட்டெருமை எதையோ துரத்திக்கொண்டு ஓடும். வானத்தில் ஒரு கழுகு வட்டமிடத் தொடங்கும். வனம் ஒரு புதையல். வனம் ஓர் அற்புதம். வனம் நம் வாழ்வின், நம் சிந்தனையின், நம் கனவின் தவிர்க்கவியலாத ஒரு பகுதி. அந்த வண்ணமயமான பகுதியை எளிமையாகவும் அழகாகவும் அறிமுகப்படுத்தும் நூல் இத�... See more
வன விலங்குகள்மீதும் சூழலியல்மீதும் ஆர்வம் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம். சலசலத்து ஓடும் ஆற்று நீரைக் கண்டு மயங்கி நிற்கும்போது, தொலைவில் ஒரு யானை பிளிறும் சத்தம் கேட்கும். அதை ஊன்றி கவனிக்கும்போது சிறுத்தையின் குரல் உலுக்கும். சில நிமிடங்களில் ஏதோ ஒரு விலங்கு நீர் அருந்த வரும். ஆந்தைகள் அலறும். காட்டெருமை எதையோ துரத்திக்கொண்டு ஓடும். வானத்தில் ஒரு கழுகு வட்டமிடத் தொடங்கும். வனம் ஒரு புதையல். வனம் ஓர் அற்புதம். வனம் நம் வாழ்வின், நம் சிந்தனையின், நம் கனவின் தவிர்க்கவியலாத ஒரு பகுதி. அந்த வண்ணமயமான பகுதியை எளிமையாகவும் அழகாகவும் அறிமுகப்படுத்தும் நூல் இது. காட்டுயிர் சார்ந்த ஆய்வுகளிலும் களப்பணிகளிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் சந்துரு தனது பயண அனுபவங்களின் ஊடாகத் தான் கண்டதையும் கேட்டதையும் கற்றதையும் கதை போல் இதில் பதிவு செய்திருக்கிறார். கழுகுகளின் உலகை இவ்வளவு நெருக்கமாகச் சென்று ஆராயும் இன்னொரு புத்தகம் தமிழில் இல்லை.