இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதற்குமுன் நமக்குப் பழக்கமான கதை சொல்லலுக்கு இன்னும் இடம் இருக்கிறதா? இல்லை என்பது தான் ஜி. காரல் மார்க்ஸின் இந்தக் கதைகளை படிக்கும் போது ஏற்படும் முதன்மையான உணர்வு. ஒருவிதத்தில் இவை கதைகளற்ற கதைகள். மனிதர்களின் விசித்திரமான கோட்டுச் சித்திரங்கள், மூட்டமான மனநிலைகள், தற்காலிகமான தருணங்களின் வானவில்கள், அபத்த நிலைகள் தரும் உலர்ந்த தன்மை. இவைதான் நாம் வாழும் காலத்தில் வாழ்வாக இருக்கிறது அதுவே இக்கதைகளின் மொழியாகவும் இருக்கிறது. ஓர் உதிரியான வாழ்நிலையின், மனநிலையின் சாட்சியங்களாகும் இக்கதைகளில் மிகக்கூர்மையான அவதானிப்புகளும் காட்சிச் சித்திரங்களும் �... See more
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதற்குமுன் நமக்குப் பழக்கமான கதை சொல்லலுக்கு இன்னும் இடம் இருக்கிறதா? இல்லை என்பது தான் ஜி. காரல் மார்க்ஸின் இந்தக் கதைகளை படிக்கும் போது ஏற்படும் முதன்மையான உணர்வு. ஒருவிதத்தில் இவை கதைகளற்ற கதைகள். மனிதர்களின் விசித்திரமான கோட்டுச் சித்திரங்கள், மூட்டமான மனநிலைகள், தற்காலிகமான தருணங்களின் வானவில்கள், அபத்த நிலைகள் தரும் உலர்ந்த தன்மை. இவைதான் நாம் வாழும் காலத்தில் வாழ்வாக இருக்கிறது அதுவே இக்கதைகளின் மொழியாகவும் இருக்கிறது. ஓர் உதிரியான வாழ்நிலையின், மனநிலையின் சாட்சியங்களாகும் இக்கதைகளில் மிகக்கூர்மையான அவதானிப்புகளும் காட்சிச் சித்திரங்களும் கூடிவந்து செறிவான வாசிப்பின்பத்தை நல்குகின்றன. - மனுஷ்ய புத்திரன்