இயற்கையோடு இணைந்த வாழ்வுக்கான கூருணர்வை இழந்துகொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில் அந்தக் கூருணர்வை உட்சரடாகக் கொண்டுள்ளது. கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல். மனிதர்களின் கதைகளை எழுதும்போதும் அசையும் அசையாப் பொருட்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என இயற்கை சூழ் வாழ்வின் மொத்தத் தொகுப்பின் ஒரு பகுதியாகவே மனித வாழ்வு இந்த நாவலில் வெளிப்படுகிறது. கிராமமும் அந்த நிலப்பரப்பும் இழந்துகொண்டிருக்கிற உயிர்க்களையைப் பற்றியும் இந்நாவல் கவலைகொள்கிறது. ஒரு கிராமத்தின் நிலவியல் தோற்றத்துடன் அதன் விலங்குகள், பறவைகள், செடிகள், கொடிகள், மனிதர்கள் என ஒரு முழுமையான சித்திரத்தை முன்வைக்�... See more
இயற்கையோடு இணைந்த வாழ்வுக்கான கூருணர்வை இழந்துகொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில் அந்தக் கூருணர்வை உட்சரடாகக் கொண்டுள்ளது. கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல். மனிதர்களின் கதைகளை எழுதும்போதும் அசையும் அசையாப் பொருட்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என இயற்கை சூழ் வாழ்வின் மொத்தத் தொகுப்பின் ஒரு பகுதியாகவே மனித வாழ்வு இந்த நாவலில் வெளிப்படுகிறது. கிராமமும் அந்த நிலப்பரப்பும் இழந்துகொண்டிருக்கிற உயிர்க்களையைப் பற்றியும் இந்நாவல் கவலைகொள்கிறது. ஒரு கிராமத்தின் நிலவியல் தோற்றத்துடன் அதன் விலங்குகள், பறவைகள், செடிகள், கொடிகள், மனிதர்கள் என ஒரு முழுமையான சித்திரத்தை முன்வைக்கும் கதையாடலை இந்நாவலுக்குள் சாத்தியப்படுத்துகிறார் கி.ரா. கிராம வாழ்வில் சாதியின் இருப்பையும் மனிதர்களின் இடத்தையும் கி.ரா. இயல்பாகக் கவனப்படுத்துகிறார். கோபல்லம் எனும் கிராமத்தின் இயல்பையும் அதில் இயக்கம் கொள்ளும் வாழ்வையும் இந்நாவல் முன்னிறுத்தினாலும் அதன் பார்வை உலகம் தழுவும் பார்வையாகவும் விரிவடைவது கி.ரா.வின் எழுத்து வன்மைக்குச் சான்றாக அமைகிறது.