மூன்று பாகங்களும் ஒரே புத்தகமாய்! 'கயல்விழி' அகிலனின் மிகச் சிறந்த சரித்திர நாவல்களுள் ஒன்று! தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற வரலாற்று நாவலான கயல்விழி, பாண்டியப் பேரரசை கதைக்களமாகக் கொண்ட படைப்பு. வரலாற்றுச் சுந்தரபாண்டியனைத் தமிழ் வாழும் அளவும் வாழத்தக்க தமிழனாக ஆசிரியர் அகிலன் படைத்துள்ளார். தமிழர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கனாக் கண்டு போற்றி வரும் பெண்மையையே கயல்விழி யாகப் படைத்து விட்டார் அகிலன் .பாண்டிய நாட்டை சோழ சாம்ராஜ்யத்திடமிருந்து மீட்ட சுந்தர பாண்டியன்,முதலில் உரையூரைத் தீக்கிரையாக்கினான், அப்போது அவன் ஒரே ஒரு பதினாறு கால் மண்டபத்தை ,மட்டிலும் ஏதும் செய்யாது விட்டு விட்டான்.... See more
மூன்று பாகங்களும் ஒரே புத்தகமாய்! 'கயல்விழி' அகிலனின் மிகச் சிறந்த சரித்திர நாவல்களுள் ஒன்று! தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற வரலாற்று நாவலான கயல்விழி, பாண்டியப் பேரரசை கதைக்களமாகக் கொண்ட படைப்பு. வரலாற்றுச் சுந்தரபாண்டியனைத் தமிழ் வாழும் அளவும் வாழத்தக்க தமிழனாக ஆசிரியர் அகிலன் படைத்துள்ளார். தமிழர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கனாக் கண்டு போற்றி வரும் பெண்மையையே கயல்விழி யாகப் படைத்து விட்டார் அகிலன் .பாண்டிய நாட்டை சோழ சாம்ராஜ்யத்திடமிருந்து மீட்ட சுந்தர பாண்டியன்,முதலில் உரையூரைத் தீக்கிரையாக்கினான், அப்போது அவன் ஒரே ஒரு பதினாறு கால் மண்டபத்தை ,மட்டிலும் ஏதும் செய்யாது விட்டு விட்டான். காரணம், கரிகால் சோழன், 'பட்டினப்பாலை' பாடிய உருத்திரங் கண்ணனாருக்கு பரிசிலாக எப்போதோ ஒரு காலத்தில் அளித்த கல் மண்டபம் அது. தமிழை,இலக்கியத்தை புலவரைப் போற்றிய அந்தச் சுந்தர பாண்டியன் தான் கயல்விழியின் கதைத்தலைவன். இத்தகு தனித்துவமான அகிலனின் படைப்பு திரு.எம் .ஜி.ஆர். நடித்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படமாக வெளிவந்துள்ளது . இதற்கு அனுமதி அளித்த அகிலன் கண்ணன் அவர்களுக்கு, எமது நன்றி. வாசித்து மகிழப் போகும் வாசகருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்! தமிழ்ப்புத்தகாலயம் 8/7/2024 Kayalvizhi –Is a historical novel that has been awarded Tamilnadu Governments prize for Historical Novels .The movie “Madurayai meeta sundarapandian” enacted Mr.M.G.R is based on this historical novel. This Historical novel by Jnanpith Awardee ,writer Akilan,is a classic.It brings the visual spectacle of golden historical era of Pandya dynasty in to the readers mind’s eye .The characterization of the central character ‘Kayalvizhi’ and the main Character “Sundara Pandian” are so powerfully laid so that they echo in the minds of the readers .