தமிழ் மக்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தை பற்றிய விழிப்புணர்ச்சியை பெருமளவில் கொண்டு சேர்த்த முதல் நூல் எமது 'வளம் பெருக்கும் வாஸ்து சாஸ்திரம்' என்றால் மிகையாகாது. அந்நூல் இருபது பதிப்புகளை தாண்டி விற்றுக் கொண்டிருக்கிறது. வாணிபம், தொழில் செய்பவர்க்கு இந்த வாஸ்து சாஸ்திரம் தேவயில்லையா? தேவை! முற்றிலும் தேவை... வாணிபம், தொழில், வியாபாரத்தை எந்த இடத்தில், எந்த திசையில் அமைக்க வேண்டும், எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன திசை ஏற்றது, முக்கியஸ்தர்கள், மேலாளர்கள், காசாளர்கள், தொழிலாளர்கள், சிப்பந்திகள் எந்த திசை நோக்கியிருந்து செயல்பட வேண்டும், அவர்களுக்கான அறைகள் எங்கெங்கே அமைக்கப்பட வேண்டும் என்ப�... See more
தமிழ் மக்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தை பற்றிய விழிப்புணர்ச்சியை பெருமளவில் கொண்டு சேர்த்த முதல் நூல் எமது 'வளம் பெருக்கும் வாஸ்து சாஸ்திரம்' என்றால் மிகையாகாது. அந்நூல் இருபது பதிப்புகளை தாண்டி விற்றுக் கொண்டிருக்கிறது. வாணிபம், தொழில் செய்பவர்க்கு இந்த வாஸ்து சாஸ்திரம் தேவயில்லையா? தேவை! முற்றிலும் தேவை... வாணிபம், தொழில், வியாபாரத்தை எந்த இடத்தில், எந்த திசையில் அமைக்க வேண்டும், எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன திசை ஏற்றது, முக்கியஸ்தர்கள், மேலாளர்கள், காசாளர்கள், தொழிலாளர்கள், சிப்பந்திகள் எந்த திசை நோக்கியிருந்து செயல்பட வேண்டும், அவர்களுக்கான அறைகள் எங்கெங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இந்நூல் விரிவாகச் சொல்கிறது. பிளாட் ஹவுஸ்கள் கட்டுபவர்களுக்கும், வாங்குபர்களுக்கும் ஏராளமான ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன. மற்றபடி தொகுதி வீடுகள், கூம்பு, கோபுர அமைப்பு வீடுகள், பல முகக் கட்டடங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள், தொழில் சாலைகள், அடுக்கு மாடிக் கட்டடங்கள் போன்ற பல பெரிய பெரிய நிறுவனங்களை வாஸ்து சாஸ்திர அடிப்படையில் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்நூலுள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வாழ்வில் வசந்தம் பரவ, வளம் கொழிக்க வேண்டுமா? அதற்கு வாஸ்து புருஷன் கைகொடுப்பார். அவரை வழிபடும் முறையும் கூட கூறப்பட்டுள்ளது. அப்புறம் என்ன ஸ்வாமி! புத்தகத்தை வாங்க வேண்டியதுதானே? புத்தகத்தை கையில் எடுத்ததுமே ஒரு மாற்றத்தை நிச்சயம் உணர்வீர்கள், பாருங்களேன். சிறிய வீடானாலும் குடிசையானாலும் சாஸ்திரத்தை அனுசரியுங்கள்; சகலமும் பெறுங்கள்.