எண்பதை நெருங்கிக்கொண்டிருந்த பாட்டி விதவையானதும் படுத்த படுக்கையாகிவிட்டார். குடும்பத்தினர் அவரைத் தங்களுக்குள் இழுக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். பாட்டிக்கோ ‘இனி நான் எழுந்திருக்கமாட்டேன்’ என்கிற பிடிவாதம். பின்னர், இந்தச் சொற்கள் இப்படி மாறின: ‘இனி புதிதாய் மட்டுமே எழுந்திருப்பேன்’. பாட்டி எழுந்திருக்கிறார். முற்றிலும் புத்தம் புதிதாக. புதிய குழந்தைப் பருவம். புதிய இளமை. சமூகத் தின் தடைகளிலிருந்தும் மறுப்புகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுப் புதிய உறவுகளிலும் புதிய உணர்வுகளிலும் முழுவதும் சுதந்திரமாய், தன்னிச்சையாய் . . . கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் க... See more
எண்பதை நெருங்கிக்கொண்டிருந்த பாட்டி விதவையானதும் படுத்த படுக்கையாகிவிட்டார். குடும்பத்தினர் அவரைத் தங்களுக்குள் இழுக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். பாட்டிக்கோ ‘இனி நான் எழுந்திருக்கமாட்டேன்’ என்கிற பிடிவாதம். பின்னர், இந்தச் சொற்கள் இப்படி மாறின: ‘இனி புதிதாய் மட்டுமே எழுந்திருப்பேன்’. பாட்டி எழுந்திருக்கிறார். முற்றிலும் புத்தம் புதிதாக. புதிய குழந்தைப் பருவம். புதிய இளமை. சமூகத் தின் தடைகளிலிருந்தும் மறுப்புகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுப் புதிய உறவுகளிலும் புதிய உணர்வுகளிலும் முழுவதும் சுதந்திரமாய், தன்னிச்சையாய் . . . கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது. இந்த நாவலின் கரு, காலகட்டம், ஒழுங்கமைதி, செய்தி அனைத்தும் தமக்கே உரித்தான தனித்துவம் நிறைந்த பாணியில் செல்கின்றன. நமக்குப் பழக்கமான எல்லைகளையும், எல்லை களுக்கு அப்பாலும், அனைத்தையும் நிராகரித்தும் தாண்டியும் செல்கின்றன. கூட்டுக் குடும்பம் தனிக்