அனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல், அவற்றைத் தமிழ் அன்னையின் அழகிய ஆபரணமாக வடித்துத் தந்தவர் தமிழ்த் தாத்தா. உ.வே.சா., 87 ஆண்டு காலம் (1855 – 1942) வாழ்ந்தபோதிலும், ‘என் சரித்திரம்’ நூல் மூலம், தம் வாழ்நாளின், 44 ஆண்டு கால (1889 முடிய) வரலாற்றை நயம்பட ஒரு புதினம் போல சுவைபட எழுதி, ‘தன் வரலாற்று நூல்களுக்கு முன்னோடியாக முத்திரை பதித்துள்ளதோடு, தன்னுடைய ஆசிரியர் மகாவித்வான், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சரித்திரத்தையும் பதித்த பெருமகனாவார். ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருமக்கள் சில�... See more
அனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல், அவற்றைத் தமிழ் அன்னையின் அழகிய ஆபரணமாக வடித்துத் தந்தவர் தமிழ்த் தாத்தா. உ.வே.சா., 87 ஆண்டு காலம் (1855 – 1942) வாழ்ந்தபோதிலும், ‘என் சரித்திரம்’ நூல் மூலம், தம் வாழ்நாளின், 44 ஆண்டு கால (1889 முடிய) வரலாற்றை நயம்பட ஒரு புதினம் போல சுவைபட எழுதி, ‘தன் வரலாற்று நூல்களுக்கு முன்னோடியாக முத்திரை பதித்துள்ளதோடு, தன்னுடைய ஆசிரியர் மகாவித்வான், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சரித்திரத்தையும் பதித்த பெருமகனாவார். ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருமக்கள் சிலரின் நிதி உதவியோடு, 10ம் பதிப்பாக வெளிவந்துள்ளது. கடந்த, 1940 முதல், 1942 முடிய ஆனந்த விகடனில் வெளியான இச்சுயசரிதம், 122 அத்தியாயங்களைக் கொண்டது. பதிப்புத் துறையில், 1874ல், நீலி இரட்டைமணிமாலை முதல், வித்துவான் தியாகராஜ செட்டியார் (1942) வரலாறு ஈறாக, 100 நூல்களைப் பதிப்பித்த, உரை எழுதிய பெருமைக்குரிய தமிழ் முன்னோடி உ.வே.சா.,