எஸ். ராமகிருஷ்ணன், நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்டவர். இவரது சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன. உலகசினிமா குறித்த பத்து முக்கிய நூல்களை எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில... See more
எஸ். ராமகிருஷ்ணன், நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்டவர். இவரது சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன. உலகசினிமா குறித்த பத்து முக்கிய நூல்களை எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம், எனது இந்தியா. மறைக்கபட்ட இந்தியா, இந்தியவானம் மூலமாக பல லட்சம் வாசகர்களின் விருப்பதிற்கு உரிய எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். இவரது துணையெழுத்து என்ற கட்டுரைகளின் தொகுப்பு ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. பத்தி எழுத்தில் தனக்கென மிகப் பெரிய வாசகவட்டத்தை உருவாக்கிய முதல் எழுத்தாளர் இவரே. சிறார்களுக்காக பதினைந்து நூல்களை எழுதியிருக்கிறார். தமிழ் திரைப்படத்துறையில் கதை திரைக்கதை வசனம் எழுதி வரும் இவர் பாபா, உன்னாலே உன்னாலே, சண்டைக்கோழி, பீமா, அவன் இவன் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார். இயல்விருது, தாகூர் இலக்கியவிருது, மாக்சிம்கார்க்கி விருது, விஸ்டம் விருது. ஞானவாணிவிருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.