சில பாதைகள்... சில பயணங்கள்... சாதனைப் பெண்களின் சுவடுகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் இன்றைய நவீன உலகில் பெண்கள் பற்றி அரிய செய்திகளை நயமாகவும், நையாண்டியுடன் ‘சீறுவோர்ச் சீறு’ என்ற முண்டாசுக் கவிஞனின் கோபத்தை போல் தன் நியாயங்களை முன் வைக்கிறார்கள். ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் படுகின்ற பாடுகளை உரிமையுடன் மகாகவியின் புதுமைப் பெண்ணாக கலகக் குரல் கொடுக்கிறார். இந்த அற்புதமான கட்டுரைகள் ‘மங்கையர் மலரில்’ தொடராக வந்தபோது வாசகர் கொடுத்த உற்சாகம் நூலாக உங்கள் கரங்களில் தவழ்கிறது.