கீற்றாகவேனும் வெளிச்சம் ஒன்று கிடைத்துவிடாதா என்று ஏங்கும் இரண்டு உள்ளங்களின் வாழ்க்கைதான் இக்கதை. தட்டினால்தான் கதவுகள் திறந்துகொள்ளும். தானாகவே திறந்துகொள்வதெல்லாம் எப்போதாவதுதான் நடக்கும். அப்படி, எப்போது திறக்கும் என்று ஏக்கத்துடன் காத்திருப்பதைவிட, மற்றவர்களைப் பற்றி யோசிக்காமல் தட்டுங்கள், தட்டுவது ஒன்றும் தவறில்லை என்று சொல்லியிருக்கிறேன்.
இக்கதையில் பிரதான பாத்திரங்களில் ஒருவராக வரும் சுசீலா என்கிற பெண்மணிதான் இந்த நாவலை நான் எழுதுவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தவர். உங்களின் நாளாந்த வாழ்வில் இக்கதையின் நாயகி யசோதினியை நீங்கள் பலமுறை கடந்திருப்பீர்கள். இனியும் கட�... See more
கீற்றாகவேனும் வெளிச்சம் ஒன்று கிடைத்துவிடாதா என்று ஏங்கும் இரண்டு உள்ளங்களின் வாழ்க்கைதான் இக்கதை. தட்டினால்தான் கதவுகள் திறந்துகொள்ளும். தானாகவே திறந்துகொள்வதெல்லாம் எப்போதாவதுதான் நடக்கும். அப்படி, எப்போது திறக்கும் என்று ஏக்கத்துடன் காத்திருப்பதைவிட, மற்றவர்களைப் பற்றி யோசிக்காமல் தட்டுங்கள், தட்டுவது ஒன்றும் தவறில்லை என்று சொல்லியிருக்கிறேன்.
இக்கதையில் பிரதான பாத்திரங்களில் ஒருவராக வரும் சுசீலா என்கிற பெண்மணிதான் இந்த நாவலை நான் எழுதுவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தவர். உங்களின் நாளாந்த வாழ்வில் இக்கதையின் நாயகி யசோதினியை நீங்கள் பலமுறை கடந்திருப்பீர்கள். இனியும் கடப்பீர்கள். அவளைச் சற்றே அதிகமாக விளங்கிக்கொள்ள, அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள இந்த நாவல் உங்களைத் தூண்டலாம். தூண்ட வேண்டும் என்பதே என் பேரவா!