ரீனிகா தன் குடும்ப சூழ்நிலை காரணமாக மும்பையின் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்ள செல்கிறாள். அங்கு சென்ற பிறகுதான் அது இரண்டு தடவை அவளது திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தி அவளையும் அவளது குடும்பத்தினரையும் ஊரை விட்டே விரட்டியடித்த ஆதீஸ்வரனின் வீடு என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தவளை சிறைப்பிடிக்காத குறையாக மிரட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் கதையின் நாயகன் ஆதீஸ்வரன்.
இவர்களுக்குள் என்ன பகை? எதற்காக அவளை தன் வீட்டிற்கு வேலைக்கு வரவழைத்தான்?
அவர்களின் மோதல்.. அதற்குள் ஒளிந்திருக்கும் ஆத்மார்த்தமா... See more
ரீனிகா தன் குடும்ப சூழ்நிலை காரணமாக மும்பையின் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்ள செல்கிறாள். அங்கு சென்ற பிறகுதான் அது இரண்டு தடவை அவளது திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தி அவளையும் அவளது குடும்பத்தினரையும் ஊரை விட்டே விரட்டியடித்த ஆதீஸ்வரனின் வீடு என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தவளை சிறைப்பிடிக்காத குறையாக மிரட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் கதையின் நாயகன் ஆதீஸ்வரன்.
இவர்களுக்குள் என்ன பகை? எதற்காக அவளை தன் வீட்டிற்கு வேலைக்கு வரவழைத்தான்?
அவர்களின் மோதல்.. அதற்குள் ஒளிந்திருக்கும் ஆத்மார்த்தமான அழகிய காதல்.. அந்த காதலை உணர்ந்து இருவரும் ஒன்று சேர நினைக்கும்போது விதியாடும் கொடூர விளையாட்டு..
அனைத்தையும் கடந்து இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பது கதையில்👇
அவளுக்குமே அவனை பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தது. அந்தளவுக்கு ராமுவும் விக்னேஷும் அவனை பற்றி பேசி அவள் மனதில் மரியாதை ஏற்றி வைத்திருந்தார்கள்.
மாலை ஐந்து மணிக்கெல்லாம் குழந்தைகளை அழகுற தயார் செய்து ராமுவுடன் அனுப்பி வைத்தவள் தானும் தயாராகி கீழே செல்ல அப்போதுதான் வாசலில் கார் வந்து நிற்கும் ஓசையும் கூடவே “டாடி” என்ற குழந்தைகளின் கூச்சலும் காதில் விழ புன்னகையுடன் முன்னேறிச் சென்றவள் அங்கு போர்டிகோவில் இரண்டு குழந்தைகளையும் இரு கரங்களில் ஏந்தியபடி மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தவனை கண்டதும் கண்ணை இருட்டி தலையை சுற்றிக் கொண்டு வந்தது..
இவனா!
மனம் முழுக்க மரியாதையுடன் அவள் ஆர்வமாக பார்க்க நினைத்தது இந்த கேடு கெட்டவனையா.
எப்படி இவன் வீட்டில் அவள்? ‘கடவுளே’ அவளுக்கு ஒரு நிமிடம் கண்ணை கட்டி காட்டில் விட்டாற்போல் ஒன்றும் புரியவில்லை. திக்பிரமை பிடித்தது போல் அப்படியே நின்றுவிட்டாள்.
*************************
இரண்டாம் தளத்திலிருந்த ஒரு அறையில் அவளை கொண்டுவந்து நிறுத்தியவர்கள் கதவை அடைத்துவிட்டு சென்றுவிட கால்கள் வலுவிழந்து நிற்க முடியாமல் தரையில் தொப்பென விழுந்தாள் ஶ்ரீனிகா.
எதிரில் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தாலும் அவன் யாரென்று உணர்ந்தும் உணராத நிலையில் தரையில் கைகளை அழுத்தமாக ஊன்றி பார்வை கலங்கலாக தெரிந்ததில் விழிகளை மீண்டும் மீண்டும் இறுக மூடித்திறந்து அந்த உருவத்தை பார்க்க முயன்றாள்.
கறுப்பு நிற ஹை பேக் விங் சேரில் (high back wing chair) கம்பீரமாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு விரலிடுக்கில் கால்வாசி புகைந்திருந்த லக்சுரி ப்ளாக் சிகரெட்டுமாக ஒரு ராஜாவின் தோரணையுடன் அமர்ந்திருந்தான் அவன்.
எங்கெங்கெல்லாமோ ஏறி குதித்து, நாய் துரத்தியதில் ஓடி, விழுந்து என அவளது உடை முழுக்க அழுக்காகி அங்கங்கு கிழிந்திருக்க கை, கால்களில் சிராய்ப்பும் ரத்தமுமாக பார்ப்பதற்கே மிகவும் பரிதாபகரமாண தோற்றத்தில் தன் முன்னால் கிடந்தவளை இரக்கமே இல்லாமல் பார்த்திருந்தவன் “வெல்கம் லோட்டஸ்” என்றான் ஆதீஸ்வரன்.