அசையாச் சொத்து ஒன்றின் விற்பனை, அடைமானம், குத்தகை, பொறுப்பு ஏற்படுத்தல், பரிமாற்றிக் கொள்ளுதல், கொ டையளித்தல் ஆகியவற்றில் சொத்தின் உரிமை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறிச் செல்கிறது. விற்பனை, கொடை போன்றவற்றில் அச்சொத்தின் உடைமையும் மற்றொருவருக்கு மாறிச் செல்கிறது. இத்தகு சொத்துரிமை மாற்றங்களை சட்டப்படி முறைப்படுத்த இயற்றப்பட்டதே, 'சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of Property Act) ஆகும். அதுபோல் ஒரு சொத்தின் உரிமையாளருக்கு, மற்றொருவருடைய சொத்திலிருந்து சில வசதிகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, காற்று வசதி, ஒளி வசதி, தண்ணீர் விடும் வசதி, நடந்து செல்லும் வழி வசதி. இந்த வசதிகளை அவர் அனுபவித்து �... See more
அசையாச் சொத்து ஒன்றின் விற்பனை, அடைமானம், குத்தகை, பொறுப்பு ஏற்படுத்தல், பரிமாற்றிக் கொள்ளுதல், கொ டையளித்தல் ஆகியவற்றில் சொத்தின் உரிமை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறிச் செல்கிறது. விற்பனை, கொடை போன்றவற்றில் அச்சொத்தின் உடைமையும் மற்றொருவருக்கு மாறிச் செல்கிறது. இத்தகு சொத்துரிமை மாற்றங்களை சட்டப்படி முறைப்படுத்த இயற்றப்பட்டதே, 'சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of Property Act) ஆகும். அதுபோல் ஒரு சொத்தின் உரிமையாளருக்கு, மற்றொருவருடைய சொத்திலிருந்து சில வசதிகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, காற்று வசதி, ஒளி வசதி, தண்ணீர் விடும் வசதி, நடந்து செல்லும் வழி வசதி. இந்த வசதிகளை அவர் அனுபவித்து வரும்போது, அவற்றை தடை செய்ய மற்றொருவருக்கு உரிமை கிடையாது. இவை வசதியுரிமைகள் எனப்படுகின்றன. இவை குறித்து இயற்றப்பட்டதே 'இந்திய வசதியுரிமைகள் சட்டம்' (Indian Easements Act) ஆகும். முதன்மையான சொத்துரிமை மாற்றுச் சட்டத்தையும், அதற்குத் துணையாக விளங்கும் இந்திய வசதியுரிமைகள் சட்டத்தையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது. 5-ஆம் பதிப்பில் வெளிவந்துள்ளதும் முக்கியமான சட்டத்தை விளக்குவதுமான இந்நூலை நழுவவிடாதீர். SPRP, PRJ. TP Act, Transfer