கவிச்சக்கரவர்த்தி கம்பரின் 'சம்பூர்ண கம்ப ராமாயணம்' எனும் இந்நூல் மிகவும் கவனத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களும் சிரமமின்றி படிக்கும் வண்ணம் சற்று பெரிய எழுத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே வயதானவர்களும்கூட சரளமாக படிக்கலாம். இராமாயணத்தின் முழு உருவமும் இதிலே காட்டப்பட்டுள்ளது. விரிவாக கதை முழுவதும் சொல்லப்பட்டுள்ளதால் வாசகர்கள் முழு திருப்தி அடையலாம். மேலும் அனேகமாக யாரும் சொல்ல விரும்பாத 'உத்தர காண்டமும்' இதிலே சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பகுதி அதிக சோகங்களையே கொண்டுள்ளதால் அதை எழுதவோ படிக்கவோ யாரும் விரும்புவதில்லை. 'நெருப்பு' என்று சொல்லிப் பாருங்கள். அது சுடாது. அ�... See more
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் 'சம்பூர்ண கம்ப ராமாயணம்' எனும் இந்நூல் மிகவும் கவனத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களும் சிரமமின்றி படிக்கும் வண்ணம் சற்று பெரிய எழுத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே வயதானவர்களும்கூட சரளமாக படிக்கலாம். இராமாயணத்தின் முழு உருவமும் இதிலே காட்டப்பட்டுள்ளது. விரிவாக கதை முழுவதும் சொல்லப்பட்டுள்ளதால் வாசகர்கள் முழு திருப்தி அடையலாம். மேலும் அனேகமாக யாரும் சொல்ல விரும்பாத 'உத்தர காண்டமும்' இதிலே சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பகுதி அதிக சோகங்களையே கொண்டுள்ளதால் அதை எழுதவோ படிக்கவோ யாரும் விரும்புவதில்லை. 'நெருப்பு' என்று சொல்லிப் பாருங்கள். அது சுடாது. அதுபோல் அந்தப் பகுதியைப் படிப்பதால் நமக்கு ஊரு விளைந்து விடாது. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்ட இராமன் நம்மையொன்றும் சோதிக்க மாட்டான். 'நன்மையே விளையும்'. அப் பகுதியையும் பக்தியோடு படியுங்கள். 'அப்படிப்பட்ட இராமனுக்கும்கூட இப்படிப்பட்ட துன்பங்களா?' என அவன்மீது இரக்கம் கொள்ளுங்கள். அவன் நம்மையும் காப்பான். நம் வம்சத்தையும் காப்பான். இது உறுதி. ஆசிரியரின் எளிய நடை புத்தகத்தை இடைவிடாமல் படிக்கத் தூண்டும் என்பது உறுதி. அவரைக் கொஞ்சம் மனம் திறந்து பாராட்டுங்கள். அவருக்கு அது போதும்.