போற்று பாகவ தமெனச் சொல்லுமிப் புராணம் ஆற்றல் சேர்ந்தசொற் றொடை பதி னெட்டி னாயிரமே" 'பரம பாகவதம்' என்பது வடமொழியில் ஸ்ரீ வேத வியாச முனிநவர் அருளிய பதினெண் புரணங்களுள் ஒன்றாகும். இது திருமாலுக்குரிய புராணங்கள் நான்கனுள் ஒன்று. ஏனைய மூன்றும் கருட புராணம், நாரதீய புராணம், விஷ்ணு புராணம் என்பன. 'பாகவதம்' என்பது பகவான் சம்பந்தமானது ஆகும். பகவானைப் பற்றியே புராணம் பாடுவதால் இது பாகவத புராணம் என்ற அழகானப் பெயர் பொருத்தம் உள்ளது என அறிகிறோம். வடமொழியில் வியாசர் எழுதிய இப்புராணத்தை முதல் நூலாகக் கொண்டு 'செவ்வைச் சூடுவார்' என்பார் தமிழில் கதைகளாகச் செய்திருப்பது சிறப்புடையதாகும்