ஹாய் சகோக்களே!
வணக்கம்! நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் தான். அப்பாவுடைய பூர்விகம் அது, அம்மாவிற்கு மேட்டூர். ம்... இதை மறந்து விட்டேனே, எனக்கு இரண்டு பெயர்கள் உண்டு. வீட்டிலும், உற்றார், உறவினர்களுக்கும் நான் தீபா, கல்வி நிறுவனங்களில் என்னுடைய அலுவல் பெயர் ஜெயலக்ஷ்மி.
ஆனால் திருமணத்திற்கு பிறகும் பெரும்பாலும் தீபா என்கிற பெயரே நிலைத்து விட்டதால், அதையே எழுத்துலகத்திற்கும் பயன்படுத்திக் கொண்டேன். என் கணவருக்கு மட்டும் ஜெய்.... See more
ஹாய் சகோக்களே!
வணக்கம்! நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் தான். அப்பாவுடைய பூர்விகம் அது, அம்மாவிற்கு மேட்டூர். ம்... இதை மறந்து விட்டேனே, எனக்கு இரண்டு பெயர்கள் உண்டு. வீட்டிலும், உற்றார், உறவினர்களுக்கும் நான் தீபா, கல்வி நிறுவனங்களில் என்னுடைய அலுவல் பெயர் ஜெயலக்ஷ்மி.
ஆனால் திருமணத்திற்கு பிறகும் பெரும்பாலும் தீபா என்கிற பெயரே நிலைத்து விட்டதால், அதையே எழுத்துலகத்திற்கும் பயன்படுத்திக் கொண்டேன். என் கணவருக்கு மட்டும் ஜெய். திருமணத்திற்கு பிறகு சென்னையில் சில வருடங்களும், பின் கணவரின் பணி மாற்றம் காரணமாக தற்பொழுது நான் வசிப்பது, தொழில் மற்றும் பூக்களின் நகரான ஒசூரில்.
முதல் நாவலுக்கு பிறகு குடும்பச் சூழ்நிலையால் எழுத்திற்கு நீண்ட இடைவெளி விட்டு ஆறு வருடங்கள் கழித்து தான் மீண்டும் ஆன்லைனில் எழுத தொடங்கினேன்.
1. காதல் வந்ததும் (கண்மணி - 2010 செப்டம்பர்)
2. எனை மன்னிக்க வேண்டுகிறேன் (செப்டம்பர் - 2016)
3. உனக்காகவே நான் வாழ்கிறேன் (அக்டோபர் - 2016)
4. சின்ன சின்ன பூவே (டிசம்பர் - 2016)
5. தீயுமில்லை புகையுமில்லை (ஏப்ரல் - 2017)
6. நானொரு சிந்து (மே - 2017)
7. அழகே அழகே எதுவும் அழகே (ஜுன் - 2017)
8. கண்ணே கலைமானே (ஆகஸ்ட் - 2017)
9. யாரோ மனதிலே (செப்டம்பர் - 2017)
10. என்னை தெரியுமா? (டிசம்பர் - 2017)
11. பூஜைக்கேற்ற பூவிது (பிப்ரவரி - 2018)
12. மாற்றுக் குறையாத மன்னவன் (ஜுன் - 2018)
13. அலைபாயும் ஒரு கிளி (அக்டோபர் - 2018)
14. உனை காப்பேன் உயிராக (பிப்ரவரி - 2019)
15. ஒரு விதை உயிர் கொண்டது (ஜுலை - 2019)
16. வராது வந்த நாயகன் (நவம்பர் - 2019)
17. நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் - குறுநாவல் (டிசம்பர் - 2020)
18. காதலுக்கு நான் புதிது (மார்ச் - 2021)
19. விழியில் தெரியும் அழகு (ஏப்ரல் - 2021)
20. மாலை எனை வாட்டுது (அக்டோபர் - 2021)
21. இது வாலிப சோதனையா... (ஜுன் - 2022)
*******
இதுவரையில் இருபது நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்து விட்டது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
தீபா பாபு
Mail id : rdeepsbabu31@gmail.com