“முத்து எடுக்கலாம் என்று மூழ்குகிறவன் செத்துப்போவதும் உண்டு. செத்துப் போகலாம் என்று கடலில் விழுகிறவன் கை நிறைய முத்துகளை அள்ளுவதும் உண்டு.” நான் இரண்டாவது ரகம். கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளிஞ்சல்களைக்கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கிற தாழ்வு மனப்பான்மைதான் என் ஒரே சொக்து. கொட்டித் தீர்க்கிற குற்றால அருவிதான் என் வீடு. ஆனால், அங்கும் நான் கவிழ்த்து வைக்கப்பட்ட குடமாகவே இருந்திருக்கிறேன். எல்லாவற்றையும் மீறி என்னையும் வெற்றி முத்தமிட்டிருக்கிறது. 'வெற்றியை ஒருவரின் பிறப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை. உழைப்புதான் தீர்மானிக்கிறது' என்னும�... See more
“முத்து எடுக்கலாம் என்று மூழ்குகிறவன் செத்துப்போவதும் உண்டு. செத்துப் போகலாம் என்று கடலில் விழுகிறவன் கை நிறைய முத்துகளை அள்ளுவதும் உண்டு.” நான் இரண்டாவது ரகம். கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளிஞ்சல்களைக்கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கிற தாழ்வு மனப்பான்மைதான் என் ஒரே சொக்து. கொட்டித் தீர்க்கிற குற்றால அருவிதான் என் வீடு. ஆனால், அங்கும் நான் கவிழ்த்து வைக்கப்பட்ட குடமாகவே இருந்திருக்கிறேன். எல்லாவற்றையும் மீறி என்னையும் வெற்றி முத்தமிட்டிருக்கிறது. 'வெற்றியை ஒருவரின் பிறப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை. உழைப்புதான் தீர்மானிக்கிறது' என்னும் என் வாழ்க்கை அனுபவத்தை, எழுத்துக் கண்ணாடியில் பார்க்துக்கொண்ட முதல் முயற்சியே இந்த நூல். – இப்படிக்கு சூர்யா
ஆஞ்சனேயருக்கு அவர் பலம் தெரியாது என்று சொல்வார்கள். அவர் வாழ்க்கையில் ஜோதிகா நுழைந்த போதுதான் படிப்படியாக விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தார். இறைவன் எங்களுக்குக் கொடுத்த கொடை சூர்யா. எங்கள் தவப்புதல்வன் அவர். இந்தக் குடும்பத்தை தன் இதயத்தில் சுமப்பவர். ’இப்படிக்கு சூர்யா’ நூல் அவர் வாழ்வின் முதல் பகுதிதான். இரண்டாம் பகுதி எதிர்காலத்தில் வரும். – சிவகுமார்