“மனித உறவுகளின் எழுத்தாளர் நர்சிம். இந்தத் தொகுப்பில் இருக்கும் இருபத்தைந்து கதைகளிலும் மனித உறவுகளின் நுட்பங்கள், மனிதர்களின் வெளி மற்றும் உள் முகங்களை, மனிதர் காட்ட விரும்பும் முகங்களை, மறைத்துக்கொள்ள விரும்பும் முகங்களை, மரணம் என்கிற சாஸ்வத்தின் திண்மையை,மரணம் சாஸ்வதம் என்பது தெரிந்தும் அதோடு முரண்டு பிடிக்கவும் மோதவும் சமன்படவும் என்பதான வாழ்வெனும் விளையாட்டை அலுக்காமல் ஆடிக்கொண்டிருக்கும் மனிதர்களைச் சற்றே நகைப்போடு எழுதுகிறார் நர்சிம்.”
-பிரபஞ்சன். (மதுரைக் கதைகள் தொகுப்பின் முன்னுரையில்)
*
சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-ல் எழுதத் தொடங்கி, தொடர்ந்... See more
“மனித உறவுகளின் எழுத்தாளர் நர்சிம். இந்தத் தொகுப்பில் இருக்கும் இருபத்தைந்து கதைகளிலும் மனித உறவுகளின் நுட்பங்கள், மனிதர்களின் வெளி மற்றும் உள் முகங்களை, மனிதர் காட்ட விரும்பும் முகங்களை, மறைத்துக்கொள்ள விரும்பும் முகங்களை, மரணம் என்கிற சாஸ்வத்தின் திண்மையை,மரணம் சாஸ்வதம் என்பது தெரிந்தும் அதோடு முரண்டு பிடிக்கவும் மோதவும் சமன்படவும் என்பதான வாழ்வெனும் விளையாட்டை அலுக்காமல் ஆடிக்கொண்டிருக்கும் மனிதர்களைச் சற்றே நகைப்போடு எழுதுகிறார் நர்சிம்.”
-பிரபஞ்சன். (மதுரைக் கதைகள் தொகுப்பின் முன்னுரையில்)
*
சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-ல் எழுதத் தொடங்கி, தொடர்ந்து தமிழின் முதன்மையான இதழ்களில் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.
90-களின் மதுரையை, மாந்தர்களை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
அய்யனார் கம்மா (2010), ஒரு வெய்யில் நேரம் (2012),பைத்தியக்காலம்(2017) மதுரைக் கதைகள் (2017), ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், தீக்கடல் (2010), தற்கொலைக்கு முயன்று தோற்றவன் (2013) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், அலப்பறை (2017) என்கிற நாவலும் இதுவரை வெளிவந்துள்ளன.
உயிருதிர்காலம் என்ற சிறுகதை,நவீன விருட்சத்தால் வெளியிடப்பட்ட சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றது.
‘அய்யனார் கம்மா’ என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு, அது ஃபெட்னா உட்பட பல விருதுகளை வென்றுள்ளது.
மனைவி மற்றும் ஒரு மகன் - வசிப்பது சென்னை அடையாறு.