தாஜி என்று அழைக்கப்படுகின்ற கம்லேஷ் படேல், உலகளாவிய ஹார்ட்ஃபுல்னெஸ் இயக்கத்தின் நான்காவது மற்றும் தற்போதைய ஆன்மிக வழிகாட்டி ஆவார். அவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு, ஹார்ட்ஃபுல்னெஸ் தியான பயிற்சி அளித்து வருகிறார். தாஜி, மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள ‘ஹார்ட்ஃபுல்னெஸ் வே’ ‘டிசைனிங் டெஸ்டினி’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘ஸ்பிரிச்சுவல் அனாடமி’ ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார். அவரது எழுத்துக்கள் மற்றும் உரைகள், டைம்ஸ் ஆஃப் இன்டியா, எகனாமிக் டைம்ஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் வெளிவந்துள்ளன. தாஜி, கலந்தாய்வுக் கூட்டங்களில் முக்... See more
தாஜி என்று அழைக்கப்படுகின்ற கம்லேஷ் படேல், உலகளாவிய ஹார்ட்ஃபுல்னெஸ் இயக்கத்தின் நான்காவது மற்றும் தற்போதைய ஆன்மிக வழிகாட்டி ஆவார். அவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு, ஹார்ட்ஃபுல்னெஸ் தியான பயிற்சி அளித்து வருகிறார். தாஜி, மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள ‘ஹார்ட்ஃபுல்னெஸ் வே’ ‘டிசைனிங் டெஸ்டினி’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘ஸ்பிரிச்சுவல் அனாடமி’ ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார். அவரது எழுத்துக்கள் மற்றும் உரைகள், டைம்ஸ் ஆஃப் இன்டியா, எகனாமிக் டைம்ஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் வெளிவந்துள்ளன. தாஜி, கலந்தாய்வுக் கூட்டங்களில் முக்கிய உரை ஆற்றுபவர், உலகம் முழுவதும் பயிலரங்குகளை நடத்தி வருபவர். தியானத்தின் மூலம் எல்லா மட்டங்களிலும் உள்ள மக்களும் பயனடைய வேண்டும், குறிப்பாக இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டவர்.