நம்முடைய பிரச்சனையிலிருந்து மீண்டு, நாம் கற்பனை செய்கின்ற அசாதாரணமான வாழ்க்கையை உருவாக்குவதற்கான திறன் நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது என்பதற்கான வாழும் ஆதாரமாக ஹால் எல்ராட் திகழ்கிறார். அவருக்கு இருபது வயதாக இருந்தபோது, குடித்துவிட்டு காரோட்டி வந்த ஒருவர் அவர்மீது மோதியதில், ஹாலுக்குப் பதினொரு எலும்புகள் முறிந்தன, அவருடைய மூளை நிரந்தரமாக பாதிப்படைந்தது. அவரால் இனி ஒருபோதும் நடக்க முடியாது என்று அவருடைய குடும்பத்தாரிடம் கூறப்பட்டது. ஆனால் ஹால் அதைப் பொய்யாக்கி, ஒரு தலைசிறந்த தொழிலதிபராகவும், நெடுந்தூர ஓட்டக்காரராகவும், பிரபல நூலாசிரியராகவும், சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாள... See more
நம்முடைய பிரச்சனையிலிருந்து மீண்டு, நாம் கற்பனை செய்கின்ற அசாதாரணமான வாழ்க்கையை உருவாக்குவதற்கான திறன் நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது என்பதற்கான வாழும் ஆதாரமாக ஹால் எல்ராட் திகழ்கிறார். அவருக்கு இருபது வயதாக இருந்தபோது, குடித்துவிட்டு காரோட்டி வந்த ஒருவர் அவர்மீது மோதியதில், ஹாலுக்குப் பதினொரு எலும்புகள் முறிந்தன, அவருடைய மூளை நிரந்தரமாக பாதிப்படைந்தது. அவரால் இனி ஒருபோதும் நடக்க முடியாது என்று அவருடைய குடும்பத்தாரிடம் கூறப்பட்டது. ஆனால் ஹால் அதைப் பொய்யாக்கி, ஒரு தலைசிறந்த தொழிலதிபராகவும், நெடுந்தூர ஓட்டக்காரராகவும், பிரபல நூலாசிரியராகவும், சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளராகவும் ஆகியுள்ளார். மக்கள் தங்களுடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த அவர்களுக்கு உதவுவதற்காக ஹால் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராகவும் ஹால் திகழ்கிறார். பெருநிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் கருத்தரங்குகளிலும் நிதி திரட்டும் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பேச அவர் அழைக்கப்படுகிறார்.