இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை. ஒரு காந்தியாக, ராமானுஜமாக, பரமஹம்சராக, ஐன்ஸ்டீனாக மாறுவது நம் எல்லோருக்குமே சாத்தியம்தான் என்றாலும் நாம் அப்படி மாறிவிடுவதில்லை. ஏன்? இதற்கான விடையை நம் மனதிடம்தான் நாம் தேடவேண்டும். காரணம் நம்முடைய எதிர்காலத்துக்கான விதைகளை நம் மனம்தான் நம்மிடம் தூவுகிறது. அதுதான் நம் கனவுகளையும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான ஆற்றலையும் வடிவமைக்கிறது. நம்மை உச்சத்துக்குக் கொண்டுசெல்ல... See more
இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை. ஒரு காந்தியாக, ராமானுஜமாக, பரமஹம்சராக, ஐன்ஸ்டீனாக மாறுவது நம் எல்லோருக்குமே சாத்தியம்தான் என்றாலும் நாம் அப்படி மாறிவிடுவதில்லை. ஏன்? இதற்கான விடையை நம் மனதிடம்தான் நாம் தேடவேண்டும். காரணம் நம்முடைய எதிர்காலத்துக்கான விதைகளை நம் மனம்தான் நம்மிடம் தூவுகிறது. அதுதான் நம் கனவுகளையும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான ஆற்றலையும் வடிவமைக்கிறது. நம்மை உச்சத்துக்குக் கொண்டுசெல்லவேண்டுமா, வேண்டாமா என்பதைப் பெருமளவில் தீர்மானிக்கக்கூடிய சக்தியாகவும் மனமே இருக்கிறது. இதன் பொருள், நம் மனதை நாம் ஒன்றுமே செய்யமுடியாது என்பதல்ல. சரியான அணுகுமுறையையும் கருவிகளையும் கையாண்டால் நம் ஒவ்வொருவராலும் நம் மனதை நம்முடைய கூட்டாளியாக, நம் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு நட்பு சக்தியாக மாற்றியமைத்துக்கொள்ளமுடியும். இந்தப் புத்தகம் உங்களுக்கு அந்த மதிப்புமிக்க கலையை எளிமையாகவும் ஏராளமான நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகளோடும் அழகுற கற்றுக்கொடுக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்த அடுத்த விநாடி, ஆல்ஃபா தியானம், மாற்றுச் சாவி உள்ளிட்ட நூல்களை எழுதிய நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வையும் சிந்தனைகளையும் மாற்றியமைக்கக்கூடிய திறன் பெற்றது.