ராம் சுரேஷின் சொந்த ஊர் வேலூர். தற்போது, துபாயில் கனரக ஊர்திகள் தயாரிப்பு நிறுவனத்தில் பொறியியல் ஆசிரியராக வேலை பார்க்கிறார். 2004-ஆம் ஆண்டில் இருந்து இணையத்தில் "பினாத்தல் சுரேஷ்" என்ற பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறார். சமணப் புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்-பட்டு வந்துள்ளன. இந்தக் கதைகளை சமணப் புலவரான திருத்தக்க தேவர் இலக்கிய நயத்துடனும் அறிவுச் செறிவுடனும் தொகுத்து அளித்தபோது சீவக சிந்தாமணி என்னும் காப்பியப் புதையல் தமிழுக்குக் கிடைத்தது. மன்னரின் மகனான சீவகன் தன் வாழ்க்கையை இடுகாட்டில் தொடங்கி, மாபெரும் செல்வங்களையும் பதவிகளையும் ஈட்டுகிறான். ஒரு கட்டத்தில், திரட்... See more
ராம் சுரேஷின் சொந்த ஊர் வேலூர். தற்போது, துபாயில் கனரக ஊர்திகள் தயாரிப்பு நிறுவனத்தில் பொறியியல் ஆசிரியராக வேலை பார்க்கிறார். 2004-ஆம் ஆண்டில் இருந்து இணையத்தில் "பினாத்தல் சுரேஷ்" என்ற பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறார். சமணப் புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்-பட்டு வந்துள்ளன. இந்தக் கதைகளை சமணப் புலவரான திருத்தக்க தேவர் இலக்கிய நயத்துடனும் அறிவுச் செறிவுடனும் தொகுத்து அளித்தபோது சீவக சிந்தாமணி என்னும் காப்பியப் புதையல் தமிழுக்குக் கிடைத்தது. மன்னரின் மகனான சீவகன் தன் வாழ்க்கையை இடுகாட்டில் தொடங்கி, மாபெரும் செல்வங்களையும் பதவிகளையும் ஈட்டுகிறான். ஒரு கட்டத்தில், திரட்டிய அனைத்தையும் துறக்கும் சீவகன், துறவறத்தை அடைந்து ஞானம் பெறுகிறான். இந்த எளிய கதைக்குள் பொதிந்துகிடக்கும் அறவியலும் அழகியலும் விவரணைக்கு அப்பாற்பட்டவை. சமண மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிய விரும்பும் எவரொருவருக்கும் இது ஓர் ஆதார நூல். ரசிக்க வைக்கும் சீவக சிந்தாமணியின் அழகிய நாவல் வடிவம்.