திகார் சிறையிலிருக்கும் ஒரு தூக்குதண்டனைக் கைதியான தீவிரவாதி, தான் தப்பிக்க, ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஒரு முக்கியப் பிரமுகரை பாகிஸ்தானுக்குக் கடத்த ஏற்பாடு செய்து வெற்றி காண்கிறான். கடத்தப்பட்ட அந்த நபரையும் அவனையும் மாற்றிக் கொள்ள அவனுடைய இயக்கம் அரசுடன் ரகசியமாகப் பேச்சு வார்த்தை நடத்துகிறது. இடையில் தூக்குதண்டனைக் கைதி தப்பிச் செல்கிறான். முக்கியப் பிரமுகரைக் காப்பாற்ற அமானுஷ்யனின் உதவியை அரசாங்கம் நாடுகிறது. இந்திய உளவுத்துறையும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் இருபக்கங்களில் இருந்து கொண்டு மறைமுகமாகக் காய்களை நகர்த்த களம் சூடுபிடிக்கிறது. அமானுஷ்யன் பாகிஸ்தான் சென்று �... See more
திகார் சிறையிலிருக்கும் ஒரு தூக்குதண்டனைக் கைதியான தீவிரவாதி, தான் தப்பிக்க, ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஒரு முக்கியப் பிரமுகரை பாகிஸ்தானுக்குக் கடத்த ஏற்பாடு செய்து வெற்றி காண்கிறான். கடத்தப்பட்ட அந்த நபரையும் அவனையும் மாற்றிக் கொள்ள அவனுடைய இயக்கம் அரசுடன் ரகசியமாகப் பேச்சு வார்த்தை நடத்துகிறது. இடையில் தூக்குதண்டனைக் கைதி தப்பிச் செல்கிறான். முக்கியப் பிரமுகரைக் காப்பாற்ற அமானுஷ்யனின் உதவியை அரசாங்கம் நாடுகிறது. இந்திய உளவுத்துறையும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் இருபக்கங்களில் இருந்து கொண்டு மறைமுகமாகக் காய்களை நகர்த்த களம் சூடுபிடிக்கிறது. அமானுஷ்யன் பாகிஸ்தான் சென்று ஐஎஸ்ஐக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் எதிராக எப்படி சமாளிக்கிறான், தப்பிச் சென்ற தீவிரவாதி என்னவெல்லாம் செய்கிறான் என்ற பரபரப்பான நிகழ்வுகளை இந்த நாவல் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சொல்கிறது. குடும்பம், பாசம், காதல், அரசியல், மானுடம், தீவிரவாதம், சாகசம் ஆகிய இழைகளோடு அமானுஷ்யனின் அதிரடி சக்திகளின் சூட்சுமங்களையும் அறிய இந்த த்ரில்லர் நாவலைப் படியுங்கள்!