மூதறிஞர் ராஜாஜியின் பொது வாழ்க்கையை மிக விரிவாக ஆவணப்படுத்தும் நோக்குடன், தமிழ் திசைப் பதிப்பகம் ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ என்கிற தலைப்பில் 800 பக்கங்கள் கொண்ட பெரும் பதிப்பு நூலினைத் தயாரித்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்நூலில், ராஜாஜியின் சமகாலத் தலைவர்கள், அவரது அமைச்சரவைச் சகாக்கள், அரசியல் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்நூலில், ராஜாஜியுடைய அரசியல் வாழ்வின் இன்றியமையாத் தருணங்களை உயிரோட்டத்துடன் நினைவு கூறும் நூற்றுக் கணக்கான அரிய புகைப்படங்கள் ‘தி இந்து’ ஆவணக் காப்பகத்தின் பொக்கிஷ ... See more
மூதறிஞர் ராஜாஜியின் பொது வாழ்க்கையை மிக விரிவாக ஆவணப்படுத்தும் நோக்குடன், தமிழ் திசைப் பதிப்பகம் ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ என்கிற தலைப்பில் 800 பக்கங்கள் கொண்ட பெரும் பதிப்பு நூலினைத் தயாரித்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்நூலில், ராஜாஜியின் சமகாலத் தலைவர்கள், அவரது அமைச்சரவைச் சகாக்கள், அரசியல் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்நூலில், ராஜாஜியுடைய அரசியல் வாழ்வின் இன்றியமையாத் தருணங்களை உயிரோட்டத்துடன் நினைவு கூறும் நூற்றுக் கணக்கான அரிய புகைப்படங்கள் ‘தி இந்து’ ஆவணக் காப்பகத்தின் பொக்கிஷ நூலகத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதியான இன்று, மூதறிஞர் ராஜாஜியின் 145ஆவது பிறந்த தினம் ஆகும். இதையொட்டி, நேற்று சென்னையில் ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை, டாக்டர் ஹெச்.வி.ஹண்டே - தமிழருவி மணியன் இணைந்து வெளியிட்டனர். இந்நிகழ்வில் தமிழருவி மணியன் பேசும்போது