ராகுல் சாங்கிருத்தியாயன் சிறந்த சிந்தனையாளர். பலமொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர். வரலாற்று அடிப்படையில் கதைகள் பின்னுபவர். சிறந்த எழுத்தாளர். எல்லாராலும் விரும்பப்படும் தத்துவஞானி. த்த்துவ நூல்கள் பல படைத்த இவர் எழுதிய வால்கா முதல் கங்கை வரை என்னும் நூல் பதினான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக அச்சிடப்பட்டன. அதைப்போலவே சிந்து முதல் கங்களை வரை என்னும் இந்நூலும் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நூலாகும். இந்நூல் எளிய நளினமான தமிழ் நடையில் வடிவம் பெற்றதற்குச் சிறந்த எழுத்தாளரான திரு. மாஜினிரங்கசாமி அவர்களே காரணமானவர். தமிழறிஞர்களின் தேவை கருதி சிந்து முதல் கங்கை வரை என்று... See more
ராகுல் சாங்கிருத்தியாயன் சிறந்த சிந்தனையாளர். பலமொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர். வரலாற்று அடிப்படையில் கதைகள் பின்னுபவர். சிறந்த எழுத்தாளர். எல்லாராலும் விரும்பப்படும் தத்துவஞானி. த்த்துவ நூல்கள் பல படைத்த இவர் எழுதிய வால்கா முதல் கங்கை வரை என்னும் நூல் பதினான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக அச்சிடப்பட்டன. அதைப்போலவே சிந்து முதல் கங்களை வரை என்னும் இந்நூலும் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நூலாகும். இந்நூல் எளிய நளினமான தமிழ் நடையில் வடிவம் பெற்றதற்குச் சிறந்த எழுத்தாளரான திரு. மாஜினிரங்கசாமி அவர்களே காரணமானவர். தமிழறிஞர்களின் தேவை கருதி சிந்து முதல் கங்கை வரை என்று இந்நூலை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம். பதிப்பகத்தார்