29 வயது அழகியான அர்ச்சனாவிடம் கல்வி, செல்வம், காதல், காவல் துறையில் உயர் பதவி, அன்பு காட்ட உறவு என்று எல்லாமே இருந்தது. ஒரு கயவனின் துப்பாக்கியிலிருந்து வெடித்த தோட்டாக்கள் அனைத்தையும் அழித்துவிட்டன. பதவியிழந்து, காதலைத் தொலைத்து, தந்தை இறந்துபோய், ஒரு கை, ஒரு கால் செயலிழந்து, வாழ்நாளெல்லாம் வீல்சேர் வாசம் என்ற நரகத்தில் தள்ளப்பட்டபோது அவளால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் காதலன் சிவா அவள் வாழ்க்கையில் நுழைகிறான். தாயாய், தந்தையாய், தாதியாய் அவளை அரவணைத்தபடி இறைவனின் அன்பைப் பற்றிச் சொல்கிறான். கதைசொல்லி மருத்துவம் என்ற பெயரில் ஒரு அன்புப் புரட்சியையே ச�... See more
29 வயது அழகியான அர்ச்சனாவிடம் கல்வி, செல்வம், காதல், காவல் துறையில் உயர் பதவி, அன்பு காட்ட உறவு என்று எல்லாமே இருந்தது. ஒரு கயவனின் துப்பாக்கியிலிருந்து வெடித்த தோட்டாக்கள் அனைத்தையும் அழித்துவிட்டன. பதவியிழந்து, காதலைத் தொலைத்து, தந்தை இறந்துபோய், ஒரு கை, ஒரு கால் செயலிழந்து, வாழ்நாளெல்லாம் வீல்சேர் வாசம் என்ற நரகத்தில் தள்ளப்பட்டபோது அவளால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் காதலன் சிவா அவள் வாழ்க்கையில் நுழைகிறான். தாயாய், தந்தையாய், தாதியாய் அவளை அரவணைத்தபடி இறைவனின் அன்பைப் பற்றிச் சொல்கிறான். கதைசொல்லி மருத்துவம் என்ற பெயரில் ஒரு அன்புப் புரட்சியையே செய்த சிவாவின் கதைதான் ஒரு கதைசொல்லியின் கதை.