நாயன்மார் கதையின் மூன்றாம் பகுதியாகிய இதில் ஏயர் கோன் கலிக்காம நாயனார் முதல் திருவாரூர்ப் பிறந்தார் வரையில் உள்ள முப்பத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகள் அடங்கி யுள்ளன. அடுத்த தொகுதியோடு இது முற்றுப் பெறும்.பெரும்பாலும் சேக்கிழாருடைய திருவாக்கை அடி யொற்றியே இந்த வரலாறுகளை எழுதினாலும், சில இடங்களில் சில கருத்துக் களை விளக்கியிருக்கிறேன்.அமிர்த வசனி' என்னும் பத்திரிகையில் வந்தவை இந்த வரலாறுகள். அதன் ஆசிரியராகிய திரு சு. முத்துசாமி ஐயரவர்களுக்கு என் நன்றி உரியது.பல காலமாக நாயன்மார் வரலாறுகளைத் தேடித் தொகுத்துச் சிந்தையில் தேக்கி இருந்தமையாலும், திருவருட்பலம் இருந்தமையாலும் சேக�... See more
நாயன்மார் கதையின் மூன்றாம் பகுதியாகிய இதில் ஏயர் கோன் கலிக்காம நாயனார் முதல் திருவாரூர்ப் பிறந்தார் வரையில் உள்ள முப்பத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகள் அடங்கி யுள்ளன. அடுத்த தொகுதியோடு இது முற்றுப் பெறும்.பெரும்பாலும் சேக்கிழாருடைய திருவாக்கை அடி யொற்றியே இந்த வரலாறுகளை எழுதினாலும், சில இடங்களில் சில கருத்துக் களை விளக்கியிருக்கிறேன்.அமிர்த வசனி' என்னும் பத்திரிகையில் வந்தவை இந்த வரலாறுகள். அதன் ஆசிரியராகிய திரு சு. முத்துசாமி ஐயரவர்களுக்கு என் நன்றி உரியது.பல காலமாக நாயன்மார் வரலாறுகளைத் தேடித் தொகுத்துச் சிந்தையில் தேக்கி இருந்தமையாலும், திருவருட்பலம் இருந்தமையாலும் சேக்கிழார் இந்தக் காவியத்தை அற்புதமாகப் பாடி முடித்தார். ஓர் ஆண்டு பெரியபுராண அரங்கேற்றம் சிதம்பரத்தில் அரசன் சேக்கிழாரை அரங்கேற்ற முடிவில் நடைபெற்றது. தன் வணங்கி, யானையின்மேல் ஊர்வலம் வரும்படி செய்தான். இரண்டு கைகளிலும் இரண்டு கவரிகளை ஏந்திச் சேக்கிழாருக்கு வீசினான். புவிச்சக்கரவர்த்தியாக இருப்பினும், தொண்டர் சீர் பரவ வல்லாருக்குரிய பெருமைக்கு முன் அவன் பணிவதற்குரியவன் என்ற உண்மையை உலகம் அறிந்து வியந்தது.பெரிய புராணம் தமிழில் உண்டான நூல். இது தமிழ் நாட்டில் உலவத் தொடங்கிய பின், தேவார ஆராய்ச்சியும் நாயன்மார் வழிபாடும் மிகுதியாயின. சமயாசாரியர்களிடம் பக்தி வளர்ந்தது. சிவபக்தி ஓங்கியது. சைவம் தழைத்தது.